Comments

பொதுவானவை

இங்கே விற்கப்படும் சிக்கன் ஃபிரை, ஹலால் செய்த முறையில் அறுக்கப்பட்டவை




நாகர்கோவில் மீனாட்சிபுரத்திலுள்ள ஒரு மதுக்கடையின் உள்ளே இருக்கும் ஒரு பாரை (BAR) ராஜா என்ற எனது மாற்று மத நண்பன் நடத்தி வந்தான்.

ஒருமுறை அவனை நான் பார்க்க சென்ற போது பார் முன்பக்கவாசலில் ஒரு போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது. அதில்

“இங்கே விற்கப்படும் சிக்கன் ஃபிரை, ஹலால் செய்த முறையில் அறுக்கப்பட்டவை” என எழுதப்பட்டிருந்தது....

நான் அவனிடம், இது ஏன்? எனக் கேட்டேன்.

அதற்கு அவன்,
'இங்கே நிறைய முஸ்லிம் வியாபாரிகள் இருக்கிறார்கள், இங்கே வருகிறார்கள், மது அருந்துகிறார்கள், ஆனால் அவர்கள் எவருமே சிக்கன் ஃபிரை சாப்பிடுவதில்லை, வெறுமனே கடலையை கொறித்துவிட்டு சென்று விடுகிறார்கள், லெப்பை அறுத்த கோழியைத் தான் சாப்பிடுவார்களாம்” என்றான்.

அதைக்கேட்டு சிரித்த நான், சரி! அதற்காக இப்படி பொய்யாக ஒரு போர்டு போடலாமா? எனக் கேட்டேன்.

அதற்கு அவன், 'பொய் இல்லைப்பா.. பக்கத்தில் இருக்கிற மீனாட்சிபுரம் பள்ளிவாசலில் இருக்கிற லெப்பை விடியற்காலையில் தொழுதுட்டு நேரே இங்கே வந்து கோழியை அறுத்து போட்டுவிட்டு போயிடறாரு.. 10 ரூபா கொடுப்பேன் என்றான்.

இப்போ முஸ்லிம்கள் எல்லோரும் ஸ்நாக்ஸாக சிக்கன் சாப்பிடுறாங்க.. எனக்கும் நல்லா வியாபாரம் நடக்குது என்றான்.

இது நடந்த கதை.

முஸ்லிம்கள் அறுக்காததை சாப்பிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் நம் சமுதாயம், மது அருந்தக்கூடாது என்பதில் உறுதியாக இல்லையே ஏன்?

முஸ்லிம்கள் அறுக்காததை சாப்பிடக் கூடாது, பன்றிக்கறி சாப்பிடக் கூடாது என்பதை சிறு வயதிலிருந்தே கற்றுத் தரும் பெற்றோர்களும் சுற்றுப்புறமும் இன்ன பிற தீமைகளை செய்யக்கூடாது என கற்றுத் தராததே காரணம் என நான் நினைக்கின்றேன்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்களால் அன்று அறியாமையில் மது அருந்தியவா்களும் திருந்தி இன்று அதை அறவே வெறுக்குமளவிற்கு மாறிவிட்டனா். அல்ஹம்துலில்லாஹ்!

அது போலவே அண்ணல் நபிகளாரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வருபவர்கள், அண்ணலாரை தனது வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.