Comments

இஸ்லாம்

நாகூர் கந்தூரி நாசமாகும் அமல்கள்..!!



🤔 தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர்...

😒 ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது.

📅 இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது தான்

ரசூலுல்லாஹ் மவ்லிது
(ரபிய்யுல் அவ்வல்)

முஹ்யித்தீன் மவ்லிது
(ரபிய்யுல் ஆகிர்)

பஷீரப்பா கந்தூரி (ஜமாதில் அவ்வல்)

ஷாகுல் ஹமீது மவ்லிது
(ஜமாதில் ஆகிர்)

காஜா நாயகம் மவ்லிது
(ரஜப் மாதம்)

🚫 என அவ்லியாக்களின் பெயரிலேயே மாதப் பிறையைக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

🚫 அந்த அளவுக்கு அவ்லியாக்களின் கந்தூரிகள் அவர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன.

🌙 பெண்கள் கணக்குப்படி ஷாகுல் ஹமீது மவ்லிதும்

🌙 நாகூர் கந்தூரிப் பிறை பிறந்து விட்டது

🎡 பிறை 1 முதல் 14 நாட்கள் நடக்கும் இப்போது நாகூரில் இந்தக் கந்தூரி நாகூரில் படு விமரிசையாக நடைபெற்று கெண்டு இருக்கிறது

🚫 நாகூர் செல்ல முடியாதவர்களுக்காக ஷாகுல் ஹமீது தர்காவின் கிளைகளும் சில ஊர்களில் உண்டு.

🚫 அந்தக் கிளைகளில் அவர்கள் கந்தூரிகளைக் கொண்டாடி தங்கள் பக்திகளை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

🚌 இக்கந்தூரியில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும்,

இலங்கை
சிங்கப்பூர்
🛫 மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து நாகூர் சன்னதியில் குழுமுவார்கள்.

👉🏿 இப்படி இவர்கள் வந்து நாகூரில் குழுமுவதன் கூடுவதன் நோக்கம் என்ன?

🚫 இவையெல்லாம் அவ்லியாக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தரும்.

🚫 இவை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் காரியங்கள் இது தான் இவர்களது எண்ணம்.

அதற்காகத் தான் இத்தனை பெரிய பயணம்
செலவுகள், 14 நாட்களுக்கு மேற்கொள்ளும் சிரமங்கள்.

👉🏿 நாம் இங்கே பார்க்கப் போவது இவர்கள் செய்கின்ற இந்தக் காரியங்கள் இவர்களுக்கு எள் அளவாவது.

👉🏿 எள் முனையளவாவது பயனளிக்குமா? என்பதைத் தான்

📖 இந்தக் கேள்விக்கு, நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்ட வந்த அல்குர்ஆன் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.

👉🏿 என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.
📖 அல்குர்ஆன் (18:102)

🔥 இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று அழைப்பதுடன் இவர்களின் இந்தக் காரியங்களுக்குத் தண்டனையாக நரகம் தான் பரிசு என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.