Comments

பொதுவானவை

வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?





எங்கும் மழைநீர்... வெள்ளத்தினால் குடியிருப்பு பகுதி களில் பாம்புகள் புகுந்துவிடுவது சகஜமாகி விட்டது சமீப காலங்களில். முடிச்சூரில் ஒரே வீட்டில் இருந்து 50 பாம்புகள் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
வழக்கமான நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வனத்துறைக்கு அதிகபட்சம் 20 அழைப்புகள் வருமாம், ஆனால் தற்போது தினமும் 70 முதல் 100 அழைப்புகள் வருகிறது என்கின்றனர் வனத்துறையினர்.
புறநகர் பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.


வீடுகளில் பாம்புகள் திடீரென புகுந்து விட்டால், யாரை தொடர்பு கொள்வது, என்ன முதலுதவி செய்ய வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை.


#வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக
044- 22200335
என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மீட்பு படையினர் உங்களை காக்க எந்நேரமும் தயார் நிலையில் இருக்கின்றனர்.


வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் அதனை அடித்துக் கொல்வதை தவிர்க்க வேண்டும். பாம்பு புகுந்துள்ள அறையை விட்டு உடனடியாக குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோரை வெளியேற்ற வேண்டும். அதன் பின்னர் அந்த அறையை தாழிட்டுக் கொள்ளவது முதற்கட்ட பாதுகாப்பு. வீடு சிறியதாக இருப்பின், வீட்டை விட்டு வெளியேறுவது உத்தமம்.

வெள்ள நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டால், கையில் ஒரு கம்பு வைத்துக் கொள்வது நல்லது. பாம்புகளை எதிர்கொள்ள நேர்ந்தால், பதற்றப்படாமல், பயம் கொள்ளாமல் கையில் உள்ள கம்பால் அதனை விலக்கி விட முயற்சியுங்கள். அதுவும் விலகி சென்று விடும்.
ஹெல்ப்லைன் மூலம் நீங்கள் உதவி கோரும் பட்சத்தில், பாம்பை பிடிக்க உடனடியாக ஆட்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் பாம்புகளை பத்திரமாக பிடித்துச்சென்று விடுவார்கள். எனவே தேவையற்ற பயமோ, பதட்டமோ வேண்டாம்.


#‎என்ன‬ செய்யக்கூடாது ?
1. பாம்புகள் உங்களைச் சீண்டாதவரை, அதை அடிக்க முற்பட வேண்டாம். அந்த முயற்சியே அதை மூர்க்கமாக்கி, ஆபத்தை விளைவிக்கூடும்.

2. வீடுகளில் அல்லது வேறு ஏதேனும் இடங்களில் பாம்பை கண்டால், அவற்றை நீங்கள் பிடிக்க முயல வேண்டாம். பாம்புகளை பிடிப்பதற்கு என்றே தனி பயிற்சிகள் பெற்ற நிபுணர்கள் மட்டுமே பாம்புகளை பிடிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஏனெனில் பாம்பைப் பிடிக்க முயலும்போது பாம்புக்கடி வாங்க நேரிடலாம். பாம்புக்கு முன் உங்கள் வீரத்தைக் காண்பிக்க முயல்வதை தவிர்க்கவும்.


3. பாம்புடன் செல்ஃபி எடுப்பது என்ற போன்ற முட்டா
ள்தனமான காரியங்களை செய்யாதீர்கள்.

4. வெயில் காலம் வரும்வரை வீட்டுக்கும், வீட்டின் வெளிப்புறத்துக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும் ஓட்டைகளை நன்றாக அடைத்து விடுங்கள். ஏனெனில் பல வீடுகளில் ஓட்டைகள் மூலமாகவே பாம்புகள் புகுகின்றன.


5. மழையில் சிக்கிய வாகனங்களின் சக்கரங்களில் பாம்புகள் சுற்றிக்கொண்டிருக்கலாம். எனவே, அப்படியான தருணங்களில் வாகனத்தை நன்கு சோதனை செய்த பிறகே ஓட்ட வேண்டும்.


6. ஹெல்மெட்டின் உள்பகுதியில் தேள் போன்றவை அண்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஹெல்மெட்டை உறையிட்டு மூடி வைக்க வேண்டும். அணியும்போதும் பூச்சிகள், தேள் போன்றவை இருக்கிறதா என சோதித்து அணியவேண்டும்.


7.வீடுகளைச் சுற்றி குப்பைதொட்டிகள் இருந்தால் மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில், குப்பைத் தொட்டி போன்றவை பாம்புகளுக்கு பாதுகாப்பான இடங்கள். வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் புதர் அண்டாமல் பார்த்துக் கொள்வதும் நல்லது.


#‎பாம்பு‬ கடித்தால் முதலுதவி என்ன?

பாம்புக்கடியை பொறுத்தவரை சினிமாவில் பார்த்து பல தவறான மூட நம்பிக்கைகள் மக்களிடம் இருக்கிறது. விஷத்தை உறிஞ்சி எடுத்து துப்புவது, பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது, கயிறு கொண்டு கட்டுவது, கீறி விடுவது போன்றவை தவறு.

பாம்பு கடித்தால் முதலில் சம்பந்தப்பட்ட நபரை எழுந்து நடக்கவோ, ஓடவோ விடாமல் அப்படியே படுக்க வைக்க வேண்டும். ஏனெனில் ரத்த ஓட்டம் அதிகரித்தால் ரத்தத்தில் விஷம் ஏறிவிடும்.


பாம்பு கடித்த இடத்தில் 15 செ.மீ. அளவுக்கு மேல் நன்றாக ஒரு விரல் இடைவெளிகொடுத்து ஒரு கர்சீப் அல்லது துணி வைத்து கட்டிவிடவும். பாம்பு கடித்த காலை நகர்த்தவே கூடாது; அதனை ஒரு கட்டையோடு சேர்த்து கட்டி விடவும்.


பாம்பு கடித்த இடத்தை நன்றாக ஐஸ் கட்டிகள் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஏனெனில் ஐஸ் கட்டிகள் ஒத்தடம் கொடுக்கும்போது அல்லது ஐஸ் கட்டிகளை கடித்த இடத்தின் மேல் வைக்கும்போது, அந்த இடத்தில் ரத்தம் உறையும் என்பதால், விஷம் ரத்தத்தில் கலப்பது தடுக்கப்படுகிறது.
சிலர் கடித்த பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்து வருவார்கள். அதுவும் தவறு. பாம்பை பார்த்து எந்த வித சிகிச்சையும் கொடுப்பது கிடையாது. எனவே பாம்பை அடிக்க ஓடாமல் பாதிக்கப்பட்ட நபரை, மருத்துவமனைக்கு விரைவாக கூட்டி செல்வதற்கே முக்கியத்துவம் அளிக்கவேண்டும்...

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.