Comments

உங்க உடம்புல இருக்கும் கெட்ட கொழுப்ப குறைக்கணுமா? அப்ப இத படிங்க!





கொழுப்பில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நமது உடலுக்கு நன்மை விளைவிக்கும் கொழுப்பு எச்.டி.எல் (High...-density lipoprotein) மற்றொன்று நமது உடலுக்கு தீங்கு விளைவுக்கும் கொழுப்பு எல்.டி.எல் (Low-density lipoprotein). இதில் எச்.டி.எல் நமது இதயத்தை பாதுகாக்க வல்லது. நம் உடலில் ஏற்படும் கொழுப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணம் எல்.டி.எல் கொழுப்பின் மிகுதியே ஆகும். எல்.டி.எல் கொழுப்பு இருக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஓர் ஆராய்ச்சியில் எல்.டி.எல் கொழுப்பை குறைத்து, நல்ல ஆரோக்கியம் அளிக்கும் உணவுகள் என ஓர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வுணவுகளை உட்கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியமும், கொழுப்பு சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள், இரத்த கொழுப்பு, தமனி, இதயப் பாதிப்புகள், மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்காது. எனவே, நாம் சிறந்த ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது அவசியம் ஆகும். அந்த வகையில் எல்.டி.எல் என்னும் கெட்ட கொழுப்புக்கள் குறைக்கும் சக்தி உள்ள சிறந்த உணவுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


 1. ஓட்ஸ்
இயற்கையாகவே கொழுப்பை குறைக்கும் தன்மை உடைய உணவு ஓட்ஸ். ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. எல்.டி.எல் கொழுப்பின் மிகுதியால் நம் உடலுக்கு ஏற்படும் முக்கியப் பாதிப்பு இதயம் சார்ந்ததாகவே உள்ளது. தினமும் அரைக் கப் ஓட்ஸ் சாப்பிடுவது நமது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க பயனளிக்கும்.
2. வால்நட்ஸ்
வால்நட்ஸ் உண்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க முடியும் என்றும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நல்ல உடல்திறன் அளிக்கிறது எனவும் ஜப்பானில் உள்ள ஒரு பல்கலைகழகம் அவர்களது ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளனர். கொழுப்புச்சத்தை குறைக்க வால்நட்ஸ்களை சாப்பிடுவது நல்லது எனவும் இது எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

3. மீன்
மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து உள்ளது. மற்றும் இதிலிருக்கும் அதிகப்படியான எச்.டி.எல் கொழுப்பு தீய கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இதுக்குறித்து நிபுணர்கள், "தினமும் உணவில் மீனை சேர்த்துக்கொள்வது நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்க உதவும் மற்றும் நமது இதயத்திற்கு நல்லது" என கூறியிருக்கின்றனர்.



4. ஆலிவ் எண்ணெய்
எப்போதும் நீங்கள் உணவுகள் சமைக்க ஆலிவ் எண்ணெய் உபயோகப்படுத்துவது நல்லது ஆகும். இதில் இருக்கும் மோனோ-அன்- சாச்சுரேட்டட் (monounsaturated) மற்றும் பாலி-அன்-சாச்சுரேட்டட் (Polyunsaturated) கொழுப்பு அமிலங்கள். நமது உடலில் எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.






5. ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியை சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள கொழுப்பை குறைக்க இயலும். உங்களது உணவுக் கட்டுப்பாட்டில் தொடர்ந்து மூன்று மாதங்கள் நீங்கள் ப்ளூபெர்ரியை சேர்த்து வந்தால் நீங்களே அதா கண்கூட பார்க்க இயலும். இது நமது உடலில் இருக்கும் தீயக் கொழுப்பைக் குறைக்க வல்லது என மருத்துவ நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டது ஆகும்.




 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.