Comments

தமிழக செய்திகள்

சாமானியன் கேட்கிறேன் தமிழக முதல்வருக்கு..!

 
 
100 ஆண்டுகளில் வரலாறு காணாத ஆழி பெரும்மழை :
....
10000+ வீடு இழந்து உள்ளனர்.,
.
1000000+ பேர் பணம் இருந்தும் சாப்பாடு இல்லாத நிலை .,
.
BY north BY south BY west என்று மும்ம்முனையிலும் சாலைகள் துண்டிக்கப்பட்டு சென்னை தனிதீவாகி உள்ளது .,
.
4500 Crores + மழை வடிகால் திட்டங்கள் சாலைகள் மேம்பாடு என்று அரசு செலவழித்த சாலைகள் இன்று பல இடங்களில் பதுங்கு குழிகள்.,
.
இதனை இடர்பாடுகள் ., சொல்லோன துயரங்கள் ஆனாலும்
.
மீடியா உங்கள் முன்னால் மைக் நீட்ட நீங்கள் அனுமதி தரவில்லை .,
.
என்ன நடவடிக்கை எடுக்க போகிறிர்கள் என்று வாக்களித்த மக்களுக்கு .,
.
சாலைக்கு வரி கொடுத்த மக்களுக்கு .,
.
உங்களுக்கு மற்றும் உங்கள் மந்திரிகளுக்கு சம்பளம் தங்கள் வரி பணத்தில் செலுத்தும் மக்களுக்கு
.
நீங்கள் மீடியா முன் நம்பிக்கை செய்ய முன் வரவில்லை ..
.
இன்னமும் கிளி பிள்ளை போலவே உங்கள் மந்திரிகள் அம்மா ஆணைப்படி ., அம்மா உத்தரவு படி எல்லாம் சிறப்பாக நடை பெறுகிறது என்று மீடியா முன்னால் நடித்து கொண்டு இருகிறார்கள் .
.
. பெரும் துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு இது அவமான படுத்துகிறது எனபதை நீங்கள் உணந்து தயவு கூர்ந்து ரெண்டில் ஒன்றை செய்யுங்கள் .,
.
ஒன்று நீங்கள் மீடியா முன் வந்து போர்கால நிவாரண பணி என்ன என்பதை தெரிவியுங்கள் அல்லது கூண்டு கிளிகள் பேசுவதை தடை செய்யுங்கள் ..
.
பாதுகாப்பான இடம் செல்லுங்கள் என்று மீடியா ஸ்க்ரோல் செய்கிறது .எது பாதுகாப்பான இடம் என்று மீடியாவுக்கு சொல்லவும் தெரியவில்லை ., அல்லது எது பாதுகாப்பான இடம் என்று அரசை கேக்க அவர்களுக்கு திராணியும் இல்லை .
.
.
ஏரிகளை interlink செய்து அதனை கூவத்தில் அல்லது கடலில் கலக்கும் ஆற்றோடு இணைத்து இருந்தால் இந்த மாபெரும் இடரை நிச்சயம் தவிர்த்து இருக்கலாம் ..
.
பிரதமர் கூப்பிட்டு என்னை பேசினார் என்று சொல்ல தெரிந்த உங்களுக்கு பிரதமரிடம் பேச தோணவில்லை .
.
, சரி போனது போகட்டும்.. இனியாவது முதல்வர் அலுவலகம் சென்று அரசு இயந்திரத்தை முடக்கி விட்டு இராணுவத்தின் மூலம் நுற்றுக்கு மேற்பட்ட Helicopter ஐ பெற்று ., நுற்றுக்கு மேற்பட்ட நிலத்திலும் நீரில்லும் (amphi car) செல்லும் வாகனம் பெற்று நீங்கள் தயவு செய்து காரியத்தில் ஈடுப்பட வேண்டும்
.
..
சென்னை வாசிகள் பெரும் துயரத்தில் உள்ளார்கள்
.
.. சரியான நேரத்தில் உதவிகள் செய்யப்படவிட்டால் எதுவும் பயன் இல்லை ..
.
மழை நீரால் வெளியே வர முடியாமல் பசியால் பல வயிறுகள் கும்பி கருகி கொண்டு இருக்கிறது..

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.