Comments

இந்தியா

டெல்லி கூட்டுக் கற்பழிப்பு வழக்கு!

 
நிர்பாயா டெல்லிக் கூட்டுக் கற்பழிப்புக் குற்றவாளிகள் ராம் சிங்,முகேஷ் சிங்,வினாய் ஷர்மா, பவன் குப்தா,அக்‌ஷய் தாகூர் மற்றும் ராஜு என்கிற முகமத் அப்ரோஸ் ஆகிய கயவர்கள் ஈடுபட்டதாக 2013ல் வந்த செய்தியை நாமெல்லாம் அறிந்தோம்.
...
இதிலே ராம் சிங், முகேஷ் சிங், வினாய் ஷர்மா, பவன் குப்தா மற்றும் அக்‌ஷய் குமார் ஆகிய ஐந்து பேர்களும் வாலிபர்கள் ஆவர். 2013 ஆம் ஆண்டு ராஜு என்கிற முகமது அப்ரோஸ் எனப் பத்திரிக்கை பரதேசிகளால் பெயர் சூட்டப்பட்ட அந்தக் கயவன் மட்டும் 18 வயது பூர்த்தி அடையாதவன்.

இந்த வழக்கு நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருந்த வேளையிலேயே ராம் சிங் என்கிற மிருகம் தற்கொலை செய்து கொண்டது. வழக்கின் முடிவில் முகேஷ் சிங், வினாய் ஷர்மா மற்றும் பவன் குப்தா என்கிற மூன்று மிருகங்களும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, ராஜு என்கிற பத்திரிக்கை பரதேசிகளால் முகமது அப்ரோஸ் எனப் பெயர் சூட்டப்பட்ட கயவன் மட்டும் சிறுவன் என்பதால் சீர் திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் கழித்து தற்பொழுது இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றான்.மேலும் பேருந்தை ஓட்டிய அக்‌ஷய் தாகூரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது கவணத்தில் கொள்ள வேண்டும்.

ராஜு என்கிற முகமத் அப்ரோஸ்
______________________________

இந்தப் பெயர் பத்திரிக்கைகளினால் வெளியிடப்பட்டுள்ள பெயர் ஆகும். இந்தப் பெயரின் உண்மைத் தன்மை என்ன என்பதை தீர விசாரித்தாலே அறிய முடியும்.

இப்பொழுது என்னவென்றால், கற்பழிப்புக் குற்றத்தின் தூக்குத் தண்டனை பெற்ற ராம் சிங், முகேஷ் சிங், வினாய் ஷர்மா மற்றும் பவன் குப்தா என்கிற மிருகங்களையெல்லாம் விட்டு விட்டு, ஏதோ இசுலாமியன் மட்டும் தான் அந்தக் குற்றத்தைச் செய்ததாக முக நூலிலே செய்தியை பரப்ப ஆரம்பித்துள்ளனர்.

ஒன்றைத் தெளிவாகப் பரப்புகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அது என்னவெனில், அவன் இசுலாமியனாக இருந்தால் என்ன இந்துவாக இருந்தால் என்ன? அவன் செய்த மாபெரும் குற்றத்திற்காகக் கட்டாயம் தூக்கிலிடப்பட வேண்டும். அதில் எந்த ஓர் இசுலாமியனும் மாற்றுக் கருத்துக் கொள்ள மாட்டான்.

அதே வேளை குஜராத்திலே கூட்டுக் கற்பழிப்புச் செய்தோம் என தெஹல்காப் வீடியோ பத்திரிக்கைக்கு வாக்கு மூலப் பேட்டி கொடுத்த கயவர்களை இந்த உச்சுக் குடுமி மன்றங்கள் ஏன் விட்டு வைத்திருக்கிறது?

நிர்பாயவின் கற்பை அழித்த இந்தக் கயவர்களை தூக்கிலிடத் தீர்ப்புக் கொடுத்த உச்சிக் குடுமி மன்றம், ஏன் குஜராத் இசுலாமியப் பெண்களைக் கூட்டுக் கற்பழிப்புக் கயவர்களை தண்டிக்கவில்லை? அவர்கள் வாக்கு மூலத்தை தஹல்கா பத்திரிக்கை வெளியிட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை?

நீதி பரிபாலனம் என்பது எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும். நிர்பாயவிற்கு கிடைத்த நீதி முழுமையாக்கப்பட வேண்டுமெனில், சிறுவன் என விடுவிக்கப்பட்ட மனித மிருகமும் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக் கருத்தில்லை. அவன் எந்த மதமாக இருந்தால் என்ன? குற்றவாளிகள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.

அதே போன்று குஜராத்திலே இசுலாமியப் பெண்களின் கற்பைச் சூரையாடியக் கயவர்களை, இன்னும் இந்தியா முழுவதிலும் பல் வேறு இந்து, கிருத்துவக் கண்ணியாத்திரிகள் மற்றும் தலித் பெண்களின் கற்பைச் சூரையாடியவர்களை தூக்கிலிட வேண்டும்.
எல்லாப் பெண்களின் கற்பும் புனிதமானதே!.

இந்த மாதர் சங்கம் என அங்கலாய்த்துக் கொள்கிற அறிவிலிகள் நிர்பாயாவிற்குக் குரல் கொடுத்ததைப் போன்று, போராடுவதைப் போன்று, மற்ற இந்து, இசுலாமிய, கிருத்துவ மற்றும் தலித் பெண்களின் கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு விரைந்து உச்சிக் குடுமி மன்றங்கள் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

நீதி எல்லோருக்கும் பொதுவானது. அது மதம், ஜாதி, இனம் மற்றும் நிறம் என பாகுபாடு பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்கப்பட்டு வழங்கப்படும் நீதி அநீதியே!


About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.