Comments

உலக செய்தி

பலஸ்தீன் மக்களின் விடுதலைக்கான பயணம் ஆரம்பம்......


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு 177 நாடுகளின் ஆதரவுடன், பலஸ்தீன் மக்களுக்கு தங்களை தாங்களே ஆளும் உரிமை இருக்கிறது என்ற எழுத்து வடிவிலான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இதன்மூலம் பலஸ்தீன் மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடியதுடன் , தங்களுக்கான சுதந்திரமான பிரதேசத்தையும் கொண்டிருக்கும்.அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் கீழுள்ள எல்லா நிறுவனங்களையும், எல்லா நாடுகளையும்... இத்தீர்மானத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் படியும், பலஸ்தீனிய மக்கள் தங்களது உரிமைகளை எவ்வளவு விரைவாக பெற முடியுமோ, அவ்வளவு விரைவாக பெறுவதற்கு உதவி செய்யும்படியும் வேண்டிக்கொண்டது.

இத்தீர்மானத்தின்படி, பலஸ்தீனியர்கள் அனுபவித்துவரும் சொல்லொனா துயரங்கள் உடனடியாக முடிவுக்குவரும் தேவை யிதுப்பதும், இஸ்ரவேலின் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டிய தருணம் வந்து விட்டதையும், பலஸ்தீனையர்களும், இஸ்ரவேலியர்களும் தங்களுக்குள் எப்பொழுதுமே தொடரக்கூடிய சமாதானத்துடனும், நீதியுடனும், புரிந்துணர்வுடன் வாழ வேண்டிய தருணம் வந்துள்ளது என்பதை குறிக்கும்.


ஐக்கியநாடுகள் சபையின் முன்னைய பிரதானமான "அமைதிக்கான நில விட்டுக்கொடுப்பு" (Land for peace) என்ற தீர்மானத்தின் அடிப்படையிலும், அரபு நாடுகளின் "சமாதானத்திற்கான முன்னெடுப்பு" (Peace initiative) என்ற வரைபுக்குள்ளும் அடங்குகிறது.


இத்தீர்மானம், ஏற்கனவே சர்வதேச நீதிமன்றத்தின் 9ஜூலை 2004 ம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய இஸ்ரவேலின் மதில் சுவரே பலஸ்தீனியர்களின் உரிமைகளை பாதித்ததற்கான காரணம் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.


கீழ்வரும் ஏழு நாடுகள் இத்தீர்மானத்திற்கெதிராக வாக்களித்துள்ளன. இஸ்ரவேல், அமெரிக்கா, கனடா, பலாவு, மிக்ரனோஸியா, நவ்ரு, மார்ஸல் தீவுகள்
நான்கு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
கமரூன், டொங்கா, தெற்கு சூடான், கொண்டூராஸ்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.