Comments

தெரிந்து கொள்வோம் ...!

வி.களத்தூர் உருவான வரலாறு...

அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)

அன்பார்ந்த நமது தளத்தின் வாசகர்களே...! உங்களுக்காக நமது ஊர் வரலாறு ஒரு சிறப்பு பார்வை...!!

இந்தக்கட்டுரை பள்ளிவாசல் திறப்பு விழா மலரில் வந்தது. உங்கள் பார்வைக்காக வெளியிடு கிறோம்..
 
தோற்றம்-
எங்கள் இனிய ஊர் திருச்சிராப்பள்ளி – சென்னை (NH-45) தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரிலிருந்து 25 கி.மீ. ஆறு கிலோமீட்டர் வடக்கே உட்புறமாக அமைந்துள்ள அமைதியான ஊராகும்.

அக்கால குறுநில மன்னர் நவாப் ஜான் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. வெளியூரிலிருந்து பிழைப்பை தேடி வந்தவர்கள், ஊரில் செல்வ செழிப்பை கண்டு பூர்வீகத்தை விரும்பி ஊரின் வளத்தை பெருக்கினார்கள்.

கல்லாற்றின் கரையோரம் அமைந்துள்ளதால் எழில் மிக்காதாய் காட்சி தருகிறது. விவசாய வளமும் சிறந்து விளங்குகிறது.

குறுநில மன்னர் நவாப் ஜான் அவர்களின் நேர்களமாக விளங்கிய எங்கள் ஊர், மன்னர் அவர்களின் அமைச்சரவையில் “களம்” – கொண்ட ஊர் என்ற பெருமையை அடைத்து, காலப்போக்கில் களம்கொண்டான் ஊர் என்றாகி தற்போது களத்திற்கு பெயர் போன ஊராகிய எங்கள் ஊர் “களத்தூர்” என்ற பெருமை பொங்க அழைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் களத்தூர் என்ற பெயர் கொண்ட ஊர்கள் நிறைய இருப்பதால், எங்கள் ஊரின் அருகாமையில் வண்ணாரம்பூண்டியை அடையாளமாக வைத்து “வ.களத்தூர்” என்ற பெயருடன் புகழ் பெற்றது.

ஊரின் அமைப்பு-
எங்கள் இனிய ஊரின் தெற்கே  ஏரியும், வடக்கே பெருமை தேடி தரும் கல்லாறும் அமைத்துள்ளது. இந்து – முஸ்லிம் சகோதரத்தன்மையுடன் வாழ்ந்து வரும் எங்கள் ஊரின் மொத்த பரப்பளவு 1355-93 ஹெக்டேர் ஆகும்.

இங்கு சுமார் 5000 ஆண்களும் 4500 பெண்களும் வாழ்ந்து வருகிறார்கள்.

இங்கு மெயின் ரோடு, கடைவீதி,பள்ளிவாசல் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, என்ற நான்கு பெரிய தெருக்களையும், அக்ரஹார தெரு, சின்ன தெரு, தெற்கு தெரு, நடு தெரு, வடக்கு சின்னத்  தெரு, மற்றும் இது தவிர சிறு சிறு சந்துக்கலாகவும், தெருக்களாகவும் அழகு சூழ அமைந்துள்ளது. ஆற்றின் மறுகரையில் மில்லத் நகர் என்ற புதிய நகரம் உருவாகி இருக்கிறது.
தொழில்-
எங்கள் ஊரின் முக்கிய தொழிலாக விவசாயம், கொடிக்கால் பயிரிடுதல், கத்தாளை இழைத்தல், சிறு வியாபாரம், போன்றவற்றை கொண்டு முன்னேறி வந்தது.

இது நாள் வரை விவசாயத்தை நம்பி வாழ்கின்ற ஏராளமான குடும்பத்தை கொண்டுள்ள ஊராகும். முப்பது வருடங்களுக்கு முன்னர் பிழைப்பை தேடி சிங்கப்பூர் – மலேசியா நாடுகளுக்கு ஒரு சிலர் சென்றனர்.

காலபோக்கில் அவர்களுக்கு அந்நாட்டின் பூர்வீக குடிமகனாகவும் இருந்து வருவதை கண்டு பெருமை அடைகிறோம். அதன் பின்பு, சுமார் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் பெட்ரோல் வளமிக்க நாடான வளைகுடாவிற்கு வேலை தேடி பயணமானவர்கள்.

அல்லாஹ்வின் கிருபையால் இன்று எங்கள் ஊரில், வீட்டிற்கு ஒரு நபராவது அயல் நாட்டிற்கு பொருள் தேட சென்ற வண்ணம் இருக்கிறார்கள் என்பதை பெருமை பொங்க கூறலாம்.

கல்வி நிலைப்பாடு-
பல வருடங்களாக அரசு உயர்நிலைப்பள்ளியாக இருந்த எங்கள் ஊர், கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு அரசு மேல்நிலைப்பள்ளியாக உருவெடுத்துள்ளது.

இங்கு சுமார் 1100 மாணவ – மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதை தவிர பெண்களுக்கு மட்டும், ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்க பள்ளியாக இருந்த ஊரில், தற்போது ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலை பள்ளி என்று உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஆண்களுக்கென்று, ஊராட்சிய ஒன்றிய தொடக்கப்பள்ளியும் பெருமை பொங்க நடைபெற்று வருகிறது. மென்மேலும் பெருமை சேர்க்க,  ஹிதாயத் ஆங்கில பள்ளியும்,ஐடியல் ஆங்கில பள்ளியும், லிட்டில் ஆனந்த் ஆங்கில பள்ளியும்,செயின் மேரிஸ் ஆங்கில பள்ளியும் நடந்து வருகிறது.


ஒன்று – இரண்டு பேர் படித்தவர்கள் என்ற நிலை மாறுபட்டு நூற்றுக்கணக்கான பட்டதாரிகள், மருத்துவர்கள், இஞ்சினியர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் என்ற புத்துணர்வோடும் பெருமையோடும் செயல்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. மேலும், புறக்காவல் நிலையம் காவல் நிலையமாக மாற்றப்பட்டு நடுநிலைமையோடு செயல்பட்டு வருகிறது.

சார்ந்த ஊர்கள்-
எங்கள் ஊரை சார்ந்து சுமார் இருபது குக்கிராமங்கள் இருந்து வருகிறது என்பதை பெருமை பொங்க கூறலாம். சுற்றியுள்ள இக்கிராமங்களுக்கு தாய் கிராமமாக எங்கள் இனிய ஊர் திகழ்கிறது.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.