Comments

தமிழக செய்திகள்

நம்ம மதுர பயலுக டாஸ்மாக் பாரிலும் வெச்சானுங்க பாரு செம ஆடித் தள்ளுபடி...

சென்னை: ஆடித் தள்ளுபடின்னா ஜவுளிக் கடைக்கும் வீட்டு உபயோக பொருட்களுக்கும் மட்டுமே உரியதா என்ன? டாஸ்மாக் பாரிலும் ஆடித் தள்ளுபடி ஆஃபர் கொடுத்து விளம்பரம் செய்துள்ளது 'சங்கம் வளர்த்த' மதுரை மாநகரத்து டாஸ்மாக் பார் நிர்வாகிகள்..
 
கிமு, கிபி என வரலாற்று சிறப்புமிக்க பெருநகரம் மதுரை மாநகரம்.. தூங்காநகரமாக அழைக்கப்படுகிற இந்த மாநகரம் தற்போது புதிய 'சாதனை' படைத்திருக்கிறது..

ஆடி மாதம் என்றாலே ஜவுளிக் கடைகளிலும் வசந்த் அண் கோ பாணி கடைகளிலும் கூட்டம் அலைமோதும்.. இந்த களேபர கூப்பாடுகளுக்கு மத்தியில் மதுரையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது இந்த போஸ்டர்...
ஹார்விபட்டி பஸ்டாப்-ல் உள்ள டாஸ்மாக் பாரில் ஆடி மாதம் முழுவதும் கிளாஸ் ரூ2; தண்ணீர் பாக்கெட் ரூ 2; சுண்டல், பயறு இலவசம்" என்று போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பார் நிர்வாகம்...
தமிழகத்தில் மதுவிற்பனை குறைந்துவிட்டதாக தமிழக அரசு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அதன் பாரத்தை சுமக்கும் வகையில் ஆடித் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது போல ஹார்விபட்டி டாஸ்மாக் நிர்வாகம்...

பார்ப்போம்... ஜவுளிக்கடைக்குப் போற கூட்டம் போல ஹார்விபட்டி டாஸ்மாக் பாருக்கும் கூட்டம் போகுதான்னா பார்க்கனும்..

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.