Comments

இந்தியா

‎பசுவை பாரதமாதாவாக‬‎ அறிவிக்க வேண்டுமென‬ ‎விசம் குடித்த விவசாயிகள்..!



 இதில் ஒரு விவசாயி இறந்து விட்டார், 3பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்....

8பேர் விசம் அருந்தி போராட்டம் நடத்தியுள்ளனர் மீதி4பேர் நிலை பரவாயில்லை.

குஜராத்தில் ராஜகோட் பகுதியில் அரசு அலுவலகம் முன்பு பசுவை பாதுகாப்போமென முழங்கி விசம் அருந்தினர்.

"பசுவை பாரதமாதாவாக அறிவிக்க வேண்டும், தெய்வத்தைப் போல பசு பரிசுத்தமானது.

நாடு முழுவதும்(மற்ற மாநிலங்களில்) பசுவை கொல்வதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியவில்லை. இதை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென கூறியுள்ளனர்" விசம் அருந்தும் போராட்டமென அறிவித்தும் அதற்கு வாய்ப்புண்டு என்பதை அறிந்தும் அதைத் தடுக்கப் போலீஸ் எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லையென சொல்லி 27பேர் சாலை மறியலில் ஈடுபட அவர்களை கைது செய்துள்ளது.

இந்துத்துவாவின் சோதனைச் சாலையான குஜராத்தில் அடுத்த சோதனை ஆரம்பமாகிவிட்டதா என்று சந்தேகிக்க வேண்டிருக்கிறது
மண்டல் கமிசனை எதிர்த்ததும் மதம் மாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்ததும், பசுவதைதடைச்சட்டம், மாட்டிறைச்சி தடை செய்ததும் குஜராத்துதான்.  இடஒதுக்கீட்டை சீர்குலைக்க படேல் ஜாதியினரை தூண்டிவிட்டதும், குஜராத் இனப்படுகொலை நடத்தி இழிபுகழ் பெற்றதும்
போலிமோதல்,போலி என்கௌன்டர்களை செய்து புகழ்பெற்றதும் குஜராத் அரசுதான் குஜராத் கலவரத்தில் விழுந்த பிணத்தில் உருவான புழுத்த புழு
உதுத்தபய மோடியை உருவாக்கி நாட்டை சீர்குலைக்கக் காரணமும் குஜராத் மாநிலம்தான்.

இந்தியாவில் இந்துமதவெறியர்களி ன் கூடாரமான குஜராத்தில் இது போல சம்பவம் ஆச்சரியமல்ல
இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

மூடர்கூடத்தால் அபத்தத்தில் செய்ததா? என்பது 1வாரத்தில் தெரியவரும்.
குஜராத்தில் ஏற்கெனவே பசுவதை,மாட்டிறைச்சித்தடை சட்டம் ஏற்கெனவே இருக்கிறது 29மாநிலங்களில் 20ல் தடை இருக்கிறது.

அப்படியிருக்க இவர்கள் போராட்டம் நடத்துவது மீதியிருக்கும் மாநிலங்களில் தடையைக் கொண்டுவர செய்யப்படும் நாடகமே.

பாரத மாதாவாக அறிவிக்க வேண்டுமாம். வேறொரு குரூப் தேசிய மிருகமாக பசுவை அறிவிக்க வேண்டுமென புலம்புக் கொண்டிருக்கிறது.

பாரத மாதா யாருடான்னு யாராவது கேட்ட இனி மாட்டைக்காட்டலாம்.

மாட்டுப் பண்ணைகளைக் கேட்டால் RSS கும்பலைக் காட்டலாம்.

நாடு நல்ல வளர்ச்சிபாதையில் போகிறது.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.