Comments

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவனுக்கு திடீர் உடல்நல குறைவு-கடலூரில் பரபரப்பு..!!

  கடலூர்,

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகி நூடுல்சுக்கு தடை

மேகி நூடுல்ஸ் உணவு பொருளில் காரீயமும், மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற ரசாயன பொருளும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் இருப்பதாக பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்ததை அடுத்து மேகி நூடுல்சை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் கடலூர் அருகே நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–

திடீர் உடல்நல குறைவு

கடலூர் முதுநகர் அருகே உள்ள தியாகவல்லி அம்பேத்கர்நகர் நடுத்திட்டு கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சத்தியசீலன் மகன் அருண்குமார் (வயது 10). இவனது தாயார் அம்சவல்லி நேற்று முன்தினம் மதியம் சமைத்துக்கொடுத்த நூடுல்சை சாப்பிட்ட அருண்குமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அவனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக திருச்சோபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

50 கிலோ பறிமுதல்

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து அருண்குமாரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடலூர் முதுநகரில் உள்ள ஒரு மளிகை கடையில் நூடுல்ஸ் வாங்கியது தெரியவந்ததை அடுத்து குறிப்பிட்ட மளிகை கடைக்கு சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்ட 50 கிலோ நூடுல்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது சிறுவனின் பெற்றோர் சொன்ன தகவலின் பேரில் அவர்கள் நூடுல்ஸ் உணவு பாக்கெட் வாங்கிய கடையை ஆய்வு செய்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ நூடுல்ஸ் உணவு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளோம். அதில் சில மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி இருக்கிறோம். அதன் முடிவு வந்த பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.