Comments

குத்தாட்டம் போட்ட இருவருக்கு வித்தியாசமான தண்டனை வழங்கிய சவூதி நீதிமன்றம்....!!

 
 
நமது நாட்டில் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் விபச்சாரம் செய்பவர்களும், காதலர்களும் எல்லைமீறுவதை அனைவரும் பார்த்திருப்போம்.

கடும் சட்ட திட்டங்கள் நிறைந்த சவூதி அரேபியாவில் கடற்கரை நகரமான ஜித்தாவில் இரண்டு ஆண்கள் குத்தாட்டம் போட்டனர், அதற்கு இரண்டு பெண்கள் கொட்டமடித்தனர். ...


பொது இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் நல்லொழுக்கத்தை கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். குற்றவாளிகளை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு அளித்த தண்டனை வித்தியாசமாக இருந்தது.

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் என்று ஆட்டம் போடாமல், அன்புக்கும், கருணைக்கும், ஆதரவுக்கும் ஏங்கும் உலகமும் உள்ளது என்பதை புரியவைப்பதற்காக இரண்டு ஆண்களுக்கும் தலா 5 இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான குழி வெட்ட வேண்டும் என்றும், இரண்டு பெண்களுக்கும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள 10 நோயாளிகளை கண்களால் காண வேண்டும் என்று ஜித்தா நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு கூறியுள்ளது.

மனிதாபிமான மற்றும் நல்லொழுக்கங்களை கடை பிடிப்பதற்கு உள்ளுணர்வுகளை இந்தியாவிலும் இதுப்போன்ற தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

(குறிப்பு : படம் அடையாளத்திற்காக போடப்பட்டது, இது உண்மை படம் அல்ல...)

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.