Comments

உலக செய்தி

காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 435 பேர் உயிரிழப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 13 நாட்களாக நடைபெற்று வரும் இந்த தாக்குதலில் இதுவரை 435 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும், 41 பெண்களும், வயதானவர்கள் 25 பேரும் அடங்குவர்.
2,500 பேர் காயமடைந்துள்ளதாகவும், 61 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தரப்பில் 18 ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே காஸா மீதான, தரை மற்றும் வான்வழித் தாக்குதலை, இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவின் குடியிருப்பு பகுதிகளிலேயே பீரங்கி குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களை எடுத்துச் செல்வதற்கும், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கும், இரு தரப்பிலும் 40 நிமிடங்கள் மட்டும் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர ஹமாஸ் அமைப்பினருக்கு எகிப்து அழைப்பு விடுத்துள்ளது. பாலஸ்தீன கோரிக்கைகளுக்கு தீர்வு காண எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என ஹமாஸ் அமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.

About super

0 comments:

Post a Comment

Powered by Blogger.