Comments

அறிவிப்பு

பள்ளிக்கு பைக்கில் வரும் மாணவர்கள் விபத்துக்குள்ளானால் தலைமையாசிரியரே பொறுப்பு

முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவு: அனைத்து  பள்ளிக

ளிலும் பல்வேறு மாணவ மாணவியர் 16 முதல் 18 வயதுடையோர் முறையான ஓட்டுநர் உரிமம் பெற இயலாத நிலையில் பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வருவதால் பல்வேறு விபத்துகளும்,  உயிர் இழப்புகளும் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவ மாணவியர்  பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வரக்கூடாது என திட்டவட்டமாக  தெரிவித்திட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.

அவ்வாறு மாணவ மாணவியர் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தால் அவர்களின் வாகன சாவியை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரை அழைத்து உரிய அறிவுரைக்கு பின்னர் வாகனத்தை நேரில்  ஒப்படைக்க வேண்டும். 

இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு அசம்பாவிதம் ஏதும் ஏற்படின் பள்ளி தலைமை ஆசிரியர்தான் முழு பொறுப்பேற்க நேரிடும் என்பதையும்  தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About super

0 comments:

Post a Comment

Powered by Blogger.