Comments

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி இந்தியப் பெருங்கடல் வரை விஸ்தரிப்பு..



வாஷிங்டன், 239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சி இன்று (வெள்ளிக்கிழமை) 7–வது நாளாக தொடர்கிறது. 12 நாடுகள் விமானங்களையும், கப்பல்களையும், செயற்கைக்கோள்களையும் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியும் சிறிதும் பலன் இல்லை.

இதற்கிடையே மாயமான விமானம் கடைசியாக ரேடார் திரையில் தோன்றியதற்கு பிறகு சுமார் 5 மணி நேரம் வானில் பறந்திருப்பதாக 2 வல்லுனர்களது தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க பத்திரிகை ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ கூறி உள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் அந்த விமானம் பாகிஸ்தான் எல்லையையோ, இந்திய பெருங்கடல் அல்லது அரபிக்கடல் பகுதியில் உள்ள இடத்தையோ சென்றடைந்திருக்க முடியும் என கூறப்படுகிறது. முன்னதாக, விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னர் மலாக்கா ஜலசந்திக்கு மேல பறந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்கள் மறுக்கப்பட்டன.
முரண்பட்ட தகவல்களால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாயமன மலேசிய விமானத்தை தேடும் பணி இந்தியப் பெருங்கடல் வரையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அந்தமான் கடல் பகுதிக்கு கப்பலை அனுப்பியுள்ளது. விமானம் இந்திய பெருங்கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து அமெரிக்கா, விமானம் தேடலை மேற்கு பகுதிக்கு மாற்றியுள்ளது.  இந்தியாவும்  அந்தமான் கடல் பகுதியில் விமானத்தை தேடி வருகிறது.
அமெரிக்கா, கடற்படையின் நெடுந்தொலைவு ரேடார் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் உள்ள பி-3சி ஓரியன் கண்காணிப்பு விமானம் மூலம் அந்தமான் கடல் பகுதியில் மலாக்கா ஜலசந்திக்கு மேற்கு பகுதியில் மாயமான விமானத்தை தேடும் பணியினை தொடங்குகிறது.
அமெரிக்காவின் பி-3சி ஓரியன் விமானம் விரைவில் மலாக்கா ஜலசந்திக்கு மேற்கு பகுதியான அந்தமான் பகுதியில் விமானத்தை தேடும் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.