Comments

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவு கோரி தி.மு.க கடிதம்...


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளரான திரு .துறைமுகம் காஜா இன்று மாலை 7 மணியளவில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

மாநில தலைமையகத்தில் இருந்த நிர்வாகிகளான பொது செயலாளர் செய்யது இக்பால்,முஹம்மது ஷிப்லி,அபு பைசல்,கே.பி.எம் முஹைதீன் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

தி.மு.க தலைமை ,தேர்தல் ஆதரவு கோரி இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களுக்கு எழுதிய கடித்ததையும் திமுக வின் தேர்தல் அறிக்கையையும் (கையேடு )மாநில நிர்வாகிகளிடம் கொடுத்த திரு.காஜா,
திமுகவின் தேர்தல் அறிக்கையின் 22 மற்றும் 23 பக்கத்தை எடுத்துக் காட்டி இதை படியுங்கள் என்றார்.

*அதில்,நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை அமல் படுத்த வேண்டும்;

*சச்சார் கமிட்டி பரிந்துரையின் படி-பட்டியல் இன சாதியினருக்கு இருப்பது போல் சிறப்பு உட்கூறு திட்டம் இஸ்லாமியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென நடைமுறைப்படுத்த நடவடிக்கை,

*தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA)உடனடியாக திரும்ப பெறவேண்டும் போன்றவை இடம் பெற்றிருந்தன.

அதோடு அறிக்கையின் 4ஆம் பக்கத்தில்,மதநல்லிணக்க வரலாறு படைப்போம் ;மதசார்பற்ற ஆட்சி அமைப்போம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

திமுக தலைவர் கலைஞர் இஸ்லாமிய சமுதாயத்திற்கு இடவொதுக்கீடு கொடுத்தது உள்ளிட்ட நன்மைகள் சிலவற்றை பட்டியலிட்ட திரு காஜா,நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கலைஞர் வாக்குறுதி கொடுத்ததாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அனைத்தையும் கேட்டுக்கொண்டு மார்ச் 16அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கின்ற எங்களது மாநில செயற்குழுவில் உங்கள் கடிதம்,தேர்தல் அறிக்கை மற்றும் திமுக தலைவரின் வாக்குறுதிகள் ஆகியவற்றை உறுப்பினர்களின் பார்வைக்கு பரிசீலனைக்கு வைப்போம்.செயற்குழு எடுக்கும் முடிவுதான் ஜமாத்தின் தேர்தல் நிலைபாடாக அறிவிக்கப்படும் என்று அவரிடம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.நன்றி கூறி விடைபெற்றார் திரு.காஜா

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.