Comments

அரசு அலுவலகங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.


News Service


அரசு அலுவலகங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் தங்கள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. விதிகளுக்கு மாறாக பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி அரசியல் கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனிடையே, தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் அரசு அலுவலகங்களில் இருந்து கொண்டே ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அரசு அலுவலகங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.