Comments

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயற்குழு முடிவு !

cheapest tablet
நேற்று சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யு பகுதியிலுள்ள சமுதாய கூடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற்குழு நடைபெற்றது.இச் செயற்குழுவில் , நாடாளுமன்ற தேர்தலில் ஜமாத்தின் தேர்தல் நிலைபாடு குறித்து முடிவெடுக்கப்பட்டது.
அ.தி.மு.க .
திமுக .
முஸ்லிம் வேட்பாளர்கள்.
என மூன்று நிலைபாடுகள் செயற்குழு உறுப்பினர்கள் முன் வைக்கப்பட்டது.
அதிமுக விற்கு ஆதரவளிப்பது குறித்த கருத்துபட மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் பேசினார்.அதிமுக அரசு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகப் படுத்துவது தொடர்பாக பிற்பட்டோர் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி பரிந்துரையை கேட்டிருப்பதையும்,இட ஒதுக்கீட்டிற்காக ஜமாஅத் 2 வருடமாக மேற்கொண்ட தொடர் முயற்சிகளையும் ,முதல்வரை கடந்த 7ந்தேதி ஜமாத்தின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்தபோது முஸ்லிம்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வருடன் கலந்துரையாடியதையும் அப்போது மாநில நிருவாகிகள் சிறைவாசிகள் மற்றும் வக்பு நிலம் ,திருமண பதிவு சட்டத்தில் உள்ள குளற்படிகள் நீக்குவது சம்பந்தமாக பேசியது ,பின்பு 10 வருடமாக மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வைத்து விட்டு அப்போது ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரை பற்றி ஒரு தடவை கூட நாடாளுமன்றத்தில் பேசமால் இப்போது தேர்தல் அறிக்கையில் கூறி ஏமாற்ற நினைப்பது அது போக 2002 குஜாரத்தில் மோடி கும்பலால் என் சொந்தங்களை கொன்ற பொது அப்போது பிஜேபியுடன் கூட்டணி வைத்த திமுக அதன் பின்பு குஜாரத் அரசே நீக்க வேண்டும் என்று கம்புயுநிஸ்ட் காங்கிரஸ் கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் போது அதை திமுகா தோற்கடித்தது, UAPA சட்டத்தை திமுக கூட்டணியில் இருக்கும் போது தான் காங்கிரஸ் கொண்டு வந்தது அப்போது எதிர்க்காமல் இப்போது தேர்தல் அறிக்கையில் கூறி ஏமாற்ற நினைப்பது ,சிறுபான்மை பாதுகாவலர் என்று கூறி ஒரு பக்கம் மத்சார்பற்ற கூட்டணி அரசு அமைப்போம் என்று முஸ்லிம்களை ஏமாற்ற அறிக்கை கொடுத்து விட்டு மறுநாளை மோடி நல்லவர் என் நண்பர் என்று கலைஞர் அறிக்கை கொடுத்தது என கூறி திமுக தேர்தல் முடிந்த பின்பு பிஜேபியுடன் கூட்டணி ஏன் வைக்காதுஎன்று அவரது பேச்சு அமைந்தது.
அவரைத் தொடர்ந்து திமுக கூட்டணியை ஆதரிக்கவேண்டும் என்ற கருத்து பட மாநில செயலளார் அபு பைசல் பேசினார்.இது நாடாளுமன்ற தேர்தல்;இதில் இடஒதுக்கீடு இரண்டாம் பட்சம் தான்;இந்த தேர்தல் மதவாத சக்திகளுக்கும் மதசார்பற்ற சக்திகளுக்குமான ஒரு யுத்தம்.மதவாத சக்திகளை முறியடிக்க மதசார்பற்ற சக்திகளை வலுப்படுத்தவேண்டும்;நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பி.ஜே.பியுடனான கூட்டணி குறித்து இதுவரை முதல்வர் ஜெயலலிதா வாய் திறக்கவில்லை.அதனால் தேர்தலுக்கு பின் பிஜேபியோடு கூட்டு சேரும் தனது திட்டத்தை அவர் உறுதிபடுத்துகிறார்;ஆனால் திமுகவோ மத்தியில் மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என தேர்தல் அறிக்கையிலேயே தெளிபடுத்தி இருக்கிறது;அதனால்,ஜெயலலிதாவிற்கு போடும் ஒட்டு நேரடியாக மோடிக்கு போடும் ஒட்டு. இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை கேட்கும் கடிதத்திற்காக நமது வாக்குகள் மோடிக்கு போவதில் ஆட்சேபனை இல்லையா?என்ற ரீதியில் அவருடைய பேச்சு அமைந்தது.
அவரை அடுத்து, முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிப்பது குறித்த கருத்து பட பேசிய பொது செயலாளர் செய்யது இக்பால்,முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும் மற்ற கட்சிகளை ஆதரிக்க கூடாது யார் நல்லவர்கள் என்று பார்த்தல் திமுக அதிமுக் இரண்டும் ஒரே அளவுதான் அதனால் கலிமா சொன்ன முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மட்டும் நாம் ஆதரவு அளிப்போம் என்று தனது நிலைபாட்டை விளக்கினார்.
இதனை தொடர்ந்து, வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு செயற்குழு உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.மாநில செயலாளர்களான நாச்சியார் கோயில் ஜாபர், புரைதா இஸ்மாயில்,ரஸ்தா செல்வம் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டு அனைத்தையும் முறைபடுத்தினர்.சொற்ப வாக்குவித்தியாசத்தில் திமுகவிற்கான ஆதரவு நிலையும்,பெரும் வாக்கு வித்தியாசத்தில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கான ஆதரவு நிலையும் பின்தங்கியது.அதிமுகவிற்கான ஆதரவு நிலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.பின்னர் மீடியாக்களுக்கும் இந்தத்தகவலை தலைவர் எஸ்.எம்.பாக்கர் அறிவித்தார்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.