Comments

வி.களத்தூர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்டம் முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.

வேப்பந்தட்டை அடுத்த வி.களத்தூர்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்டம் முகாமில் பங்கேற்ற பொதுமக்கள். 


தமிழக முதல்வரின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதியன்று ‘அம்மா திட்டம்’ என்கிற பெயரில் அடித்தட்டு கிராம மக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் தேடிச் சென்று முகாமிட்டு அன்றைய தினமே பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தீர்வு தரும் நிகழ்வு துவக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு கிராமம் கிராமமாக தமிழகம் முழுக்க உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் மக்களைத்தேடிச் சென்று நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட வி.களத்தூர் பஞ்சாயத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்ற கிராம அலுவலகதிற்க்கு காலையில் நேரில் சென்றோம்.

அலுவலகம் திறப்பதர்க்கு முன்பே சிலர் மனுக்களுடன் காத்திருந்தனர். பத்து மணிக்கு அந்தப் பகுதி வருவாய் அலுவலர், ஆறேழு கிராம நிர்வாக அலுவலர்களுடன் வந்தார்.  நாற்காலிகள் போட்டு மனுக்கள் எழுத இரண்டு புறமும் வரிசையாக மேஜைகள் அமைத்து ஏற்பாடுகளை


 ஊர் பஞ்சாயத்து தலைவரான முஹமது இஸ்மாயில்  செய்திருந்தார். மக்கள் வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர்.

அம்மா திட்ட முகாம் என பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்ட காகிதங்களில் சில விவரங்களைப் பூர்த்தி செய்து பயனாளிகள் வழங்கும் விவரங்களையும் சேர்த்து அங்கேயே காத்திருக்கும் அடுத்தக் கட்ட அதிகாரிகளுக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கேயே கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த மனுக்களின் மீது பரிசீலனை செய்து தகுதியுடைய மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது.

இந்த கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பும் அம்மா திட்ட முகாம் நடைபெற்றிருந்ததால் இம்முறை மனுக்கள் குறைவாகவே வந்தன. கடந்த முறை 192 மனுக்கள் வந்தன. இம்முறை 143 மனுக்கள் வந்தன. அதில் 80 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. பெரும்பாலான மனுக்கள் சாதி, வருவாய், இருப்பிட சான்றிதழ்கள் கேட்டும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாகவும் வந்தன. பட்டா பெயர் மாற்றம், பட்டா சப் டிவிசன் செய்தல் தொடர்பாக வந்த மனுக்கள் மீது பிறகு நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதாகச் சொல்லி அனுப்பி வைத்தனர். வேப்பந்தட்டை வட்டாட்சியர், பெரம்பலூர் கோட்டாட்சியர், பயிற்சி துணை ஆட்சியர் ஆகியோரும் மதியம் 1 மணிக்கு அங்கே வந்தனர். பரிசீலனை முடிந்த மனுக்கள் தொடர்பானவற்றுக்கு உடனே சான்றிதழ்கள் தயாரித்து வழங்கினர்.

போதிய சான்றுகள் இல்லாமல் வந்த சிலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.


வருவாய்த் துறை அலுவலகங்க ளுக்கு சில சேவைகளைப் பெற அலையும் பொதுமக்களுக்கு அம்மா திட்டம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம் எனலாம்.

சாதிச் சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், வட்டாட்சியர் அலுவல கங்களுக்கு நாள் கணக்கில் படையெடுக்கும் சாமான்ய பொது ஜனத்திற்கு இம்முகாமில் சில நிமிடங்களில் அவர்கள் விரும்பும் சில சான்றிதழ்கள் கிடைக்கின்றன.






About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.