Comments

பெரம்பலூரில் தமுமுக நடத்திய டிசம்பர் 06 மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று ( டிசம்பர் 06) மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாலை 4.00 மணிக்கு நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்டத் தலைவர் K.A.மீரா மொய்தீன் தலைமை வகித்தார். தமுமுக மாவட்டச் செயலாளர் பொறியாளர்.ரஷீத் அஹமது, மாவட்ட பொருளாளர் M.முஹம்மது இலியாஸ், துணைச் செயலாளர்கள் நூர் முஹம்மது, A.குதரத்துல்லா, மக்கள் தொடர்பு அலுவலர் A.ஹயாத் பாஷா, தொண்டரணிச் செயலாளர் K.ஜஹாங்கீர், மாணவர் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் A.ஜமீர் பாஷா, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் K.முஹம்மது உஸ்மான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுச்சி உரையினை மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் M.சுல்தான் மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட மாணவரணிச் செயலாளர் K.முஹம்மது இலியாஸ் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வீர.செங்கோலன், திராவிட விடுதலை கழக மாவட்டத் தலைவர் துரை.தாமோதரன் ஆகியோர் ஆற்றினர். கண்டன உரையினை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் S.S.நாசர் உமரி ஆற்றினார்.. போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் லிபர்ஹான் ஆணைய பரிந்துரைக்கு நடவடிக்கை கேட்டும், பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு காரணமான அத்வானியின் ரதயாத்திரை கும்பலை தண்டிக்க கோரியும், மதவெறியை ஒழிக்க கோரியும், நாட்டைப் பிடிக்க துடிக்கும் மதவெறியை தூண்டிய மோடி போன்றவர்களை எச்சரிக்கை விட்டும் கோசங்களை எழுப்பினர். முன்னதாக தமுமுக குன்னம் ஒன்றியத் தலைவர் மௌலவி. S. சையது உசேன் வரவேற்க, தமுமுக பெரம்பலூர் நகர செயலாளர் M.முஹம்மது ஹனிபா நன்றி தெரிவித்தார்.






















About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.