Comments

ஆண்களுக்கு ஓர் அதிர்ச்சிச் செய்தி: 2014 முதல் ஷேவிங் - ரூ 50, கட்டிங் -ரூ 100...!

சென்னை: இட வாடகை அதிகரித்து விட்டக் காரணத்தால், வரும் புத்தாண்டு முதல் முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல் ஆகியவற்றின் கட்டணங்கள் உயர இருப்பதாக தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. சவரத் தொழில் என்ற ஒன்று இல்லையென்றால், மனிதன் இன்னும் ஆதிகாலத்தைப் போலவே ஜடாமுடியோடு தான் சுற்றியிருப்பான். மனிதர்களை அழகாக்குவதில் முக்கியப் பங்கு, சவரத் தொழிலாளர்களுக்கு உண்டு. அந்தவகையில், இடவாடகை அதிகரிப்பால் தங்களது கட்டணத்தையும் உயர்த்தியுள்ளனர் சவரத் தொழிலாளர்கள். இது குறித்து தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது... 


கட்டண உயர்வு... 
சமீப காலமாக சவரம் செய்யும் கடைகளின் வாடகை அதிகரித்து விட்டதால் முடிதிருத்தும் கட்டணம் ஜனவரி 2014 முதல் உயர்த்தப்படுகிறது.  


முடிவெட்ட... 
அதன்படி பெரியவர்களுக்கு முடிவெட்டு வதற்கு சாதாரணக் கட்டணம் ரூ.100 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.150 ஆகவும் உயர்த்தப்படுகின்றன‌.


முகச்சவரம் செய்ய.... 
அதேபோல முகச்சவரம் செய்வதற்கு சாதாரண கட்டணம் ரூ.50 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.80 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.



சிறுவர்களுக்கு.... 
மேலும் சிறுவர்களுக்கு முடிவெட்டும் சாதாரண கட்டணம் ரூ.80 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.120 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.



சிறுமிகளுக்கு.... 
சிறுமிகளுக்கு முடிவெட்ட சாதாரணக் கட்டணம் ரூ.100 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.200 ஆகவும் உயர்த்தப்படுகின்றன' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கலரிங்.... 
இவை தவிர, முடி கருப்பாக்குவதற்கு சாதாரண கட்டணம் ரூ.150 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.200 ஆகவும் மற்றும் ஹேர் கலரிங் செய்ய சாதாரண கட்டணம் ரூ.200 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.