Comments

ஏர்வாடி சந்தனக்கூடு ஊர்வலம் ரத்து



(18 Nov) திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த சந்தனக்கூடு ஊர்வலம் பொது அமைதி கருதி ரத்து செய்யப்பட்டது.ஏர்வாடியில் மொஹரம் பண்டிகையையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் சந்தனக்கூடு ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தனர். இதையடுத்து, சுராஜுதீன் தரப்பினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் சந்தனக்கூடு ஊர்வலத்துக்கு தடைகேட்டு மனு செய்தனர். இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற மதுரை கிளை, 2011-ல் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தின் முடிவின்படி நடந்துகொள்ளவேண்டும் என அறிவித்தது.2011-ல் சந்தனக்கூடு ஊர்வலம் தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டபோது நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், சந்தனக்கூடு ஊர்வலம் நடத்தக் கூடாது என முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், ஒரு தரப்பினர் மாவட்ட காவல் துறையினரின் அனுமதியோடு சனிக்கிழமை குதிரை ஊர்வலத்தை நடத்தினர். இந்த ஊர்வலத்தை தடுக்க மற்றொரு தரப்பினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் வள்ளியூர் டி.எஸ்.பி. ஸ்டேன்லி ஜோன்ஸ் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் குதிரை ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுவதாக இருந்தது. இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் ஜமாத் தலைவர்கள் மற்றும் ஊர்ப் பெரியவர்கள் பேசி பொது அமைதி கருதி ஊர்வலத்தை ரத்து செய்தனர்.

நன்றி: தினமணி

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.