Comments

சிரியா விவகாரம் : ரஷ்யாவின் சமரச முயற்சிக்கு அமெரிக்கா ஒப்புதல்!




வாஷிங்டன்: சிரியா விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீட்டை தொடர்ந்து திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவின் யோசனையை ஏற்று சமரசத்திற்கு முன்வந்துள்ளது. சிரியா மீது அமெரிக்கா போர் தொடுப்பதை ரஷியா ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து எதிர்த்து வருகிறது. சிரியாவிடமுள்ள ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க செய்வதன் மூலம் போர் மூளுவதை தவிர்க்க ரஷியா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ரஷியாவின் இந்த முயற்சியை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். சிரியா தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்கும்பட்சத்தில் தாக்குதலை தவிர்க்க வாய்ப்பிருப்பதாகவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் இந்த சமரச முயற்சியை தாக்குதலிலிருந்து தப்பிக்கும் தாமதிக்-கும் முயற்சியாக சிரியா செயல்பட்டால் அதற்கான விளைவுகளை சிரியா நிச்சயம் கடுமையாக சந்திக்க நேரிடும் என்றும் ஒபாமா எச்சரித்துள்ளார். ரஷியாவின் சமரச முயற்சியை சிரியாவும் வரவேற்றுள்ளது. ரஷியாவின் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக சிரிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரஷியாவின் திட்டத்தை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். ரஷியாவின் தலையீட்டையடுத்து அமெரிக் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த வாக்கெடுப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.   

நன்றி: தினகரன் 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.