Comments

வன்முறையாளர்களிடம் சிக்காமல் 150 இஸ்லாமிய பெண்கள், குழந்தைகளைக் காத்த ஜாட் நபர்!

வன்முறையாளர்களிடம் சிக்காமல் 150 இஸ்லாமிய பெண்கள், குழந்தைகளைக் காத்த ஜாட் நபர்!

முசாபர் நகர், உ.பி.: ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், வன்முறை மூண்டுள்ள முசாபர் நகர் பகுதியில், வன்முறையாளர்களிடம் சிக்கி விடாமல், முஸ்லீம்கள் 150 பேருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளார். இந்த 150 பேரில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். உ.பி. மாநிலம் முசாபர் நகரில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. இஸ்லாமியர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர். ராணுவமும் அங்கு தற்போது முகாமிட்டுள்ளது. இந்த நிலையி்ல் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டில் முஸ்லீம்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்புடன் தங்க வைத்த செயல் அனைவரையும் நெகிழ வைப்பதாக உள்ளது.

வன்முறையாளர்களிடம் சிக்காமல் 150 இஸ்லாமிய பெண்கள், குழந்தைகளைக் காத்த ஜாட் நபர்!

இவரே அனைவருக்கும் சாப்பாடு கொடுத்துள்ளார். ராணுவம் வந்து அனைவரையும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றபோது அவர்களை பிஜேந்திர சிங்கின் மனைவி கண்ணீர் மல்க வழியனுப்பிவைத்தார். இதுகுறித்து பிஜேந்திர சிங் கூறுகையில், வெளியில் வன்முறையாளர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். முஸ்லீம்களை வெளியே விடு இல்லாவிட்டால்,வீட்டை நொறுக்குவோம் என்று அவர்கள் கத்தினர். சுவரேறி வந்து விடுவதாகவும் மிரட்டினர். ஆனால் நான் பயப்படவில்லை. அவர்களும் வரவில்லை. மீறி வந்திருந்தாலும் நான் சமாளித்திருப்பேன் என்றார். 
வன்முறையாளர்களிடம் சிக்காமல் 150 இஸ்லாமிய பெண்கள், குழந்தைகளைக் காத்த ஜாட் நபர்!

இந்த கிராமத்தில் ஒரே ஒரு முஸ்லீம் மட்டு்மே வன்முறைக்குப் பலியானார். 150பேரும் போன நிலையில், செவ்வாய்க்கிழமையன்றும் தனது வீட்டில் 12 முஸ்லீம்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றியுள்ளார் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்முறையாளர்களிடம் சிக்காமல் 150 இஸ்லாமிய பெண்கள், குழந்தைகளைக் காத்த ஜாட் நபர்!

நன்றி:ஒன்இந்தியா 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.