வி.களத்தூர் ஊராச்சியில் 12 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 வாரங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு நாள் விட்டு ஒருநாள் வரும் தண்ணீர் கூட 2 குடங்களுக்கு மேல் வருவதில்லை. அதுவும் குடிக்கலாயக்கற்றதாக உவர்ப்பு தன்மையுடன் உள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பெண்கள் காலி குடங்களுடன் தண்ணீரை தேடி அலைகின்றனர். இதேபோல ஆண்களும், சிறுவர்களும் சைக்கிள் மற்றும் தள்ளு வண்டிகளில் சென்று வயல்களுக்கு சென்று குடிநீர் சேகரித்து வருகின்றனர்.
இதனால் நமது பகுதிகடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் வி.களத்தூர் ஊராச்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராச்சி நிர்வாகம் சார்பில் தங்கு தடையின்றி வினியோகம் செய்யும் வகையில் தினமும் லரிகளில் குடிநீர் விநயோகிக்கப்பட்டு வருகிறது. .
இன்னும் சில தினங்களுக்குள் அவை சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஆறுகளின் குடி நீரை மட்டும் நம்பாமல் ஊராச்சி நிர்வாகம் மூலமாகவே மக்களுக்கு தேவையான குடிநீரை முழுமையாக சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நமது ஊர் ஆற்றில் குடிநீர் பைப் அமைக்கும் காட்சி.
0 comments:
Post a Comment