Comments

மும்பை : பால் தாக்கரே பாதையில் பயணிக்கும் "பாசிச" போலீஸ்!




  மும்பை ரவுடி பால் தாக்கரே மரணத்தையொட்டி, 2 நாட்களாக நடத்தப்பட்ட கடையடுப்புக்கள், பால் தாக்கரே மீதான மரியாதையால் அல்ல, சிவசேனை ரவுடிகளின் பயத்தினால் தான் என்று, "ஃபேஸ் புக்"கில் கருத்து பகிர்ந்துக்கொண்டதால் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பையை சேர்ந்த 21வயது இளம்பெண் (சிங்கம்) "ஷாஹீன்" என்பவர், தெரிவித்திருந்த கருத்துக்கு "ரேணு" என்ற இன்னொரு இளம்பெண் "Like" கொடுத்த பாவத்துக்காக அவரும் கைது செய்யப்பட்டார்.

கருத்து சுதந்திரத்துக்கு கடும் பங்கம் விளைவிக்கும் வகையில், 2000 சிவசேனை குண்டர்கள் அவரது வீட்டிற்கு வந்து ரகளை செய்தனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், உடனடியாக ஃபேஸ் புக்கில் தெரிவித்திருந்த கருத்தை நீக்கி விட்டதுடன் வருத்தம் தெரிவித்து புதிய கருத்தையும் பதிவு செய்துவிட்டார்.
என்றாலும் வெறியுடன் திரிந்த "சிவசேனை குண்டர்கள்" ஷாஹீனின் சிறிய தகப்பனாருக்கு சொந்தமான கிளினிக்கை அடித்து நொறுக்கி விட்டனர்.
அதிகார வர்க்கத்தினர், மேற்படி இரு பெண்களின் ஃபேஸ் புக் அக்கவுண்டையும் முடக்கிவிட்டனர்.
போலீசும் தன் பங்குக்கு "மத உணர்வுகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டது" மற்றும் "தகவல் தொழில்நுட்ப முறைகேடு"  என  (295A, 64A) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
போலீசின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, இரு பெண்களையும்  தலா ரூ.15,000 ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுவித்தனர்.
மார்க்கண்டே கட்ஜூ கண்டனம் :
மகாராஷ்டிர போலீசின் கைது நடவடிக்கைக்கு "பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ" கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
முழு அடைப்புக்கு எதிராக கருத்து சொல்வதை, மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறுவது ஏற்க முடியாது.
அரசியல் சட்டம் 19-1ன் கீழ் இப்படி கருத்து தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது.
நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்.. பாசிச சர்வாதிகார ஆட்சி இங்கு நடைபெறவில்லை.
கைது செய்ய உத்தரவிட்ட போலீஸ் மீது உடனடியாக "சஸ்பெண்ட்" அல்லது "கைது" அல்லது "குற்றவியல் நடவடிக்கை" இதில் எது அதிகபட்சமோ, அந்த நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும்.
இதை நீங்கள் செய்ய முடியாத நிலையில் அரசியல் சாசனப்படி.. ஒரு அரசை நடத்த தகுதியற்றவராகிறீர்கள்.. இதற்குரிய சட்டவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.

நன்றி.மறுப்பு இணையதளம்

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.