அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே.

இவ்வுலக மாந்தர்களின் இனம்-நிறம்-மொழி வேற்றுமைகளை வேறோடும் வேறடிமண்ணோடும் வீழ்த்தி, மனிதர்கள் அனைவரும் சமமே என்ற சமத்துவம் கண்ட சத்திய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கிட முற்படும் அனைவருக்கும் பூரணசந்திரன் போல இவ்வுண்மை விளங்கும்.
** அறைக்குள் இருந்தே அகிலத்தையே உன்கையில் அடக்கும் வசதியிருந்தும்!
** அணு ஆராய்ச்சி மாறி நிலவிலும் வலம் வரலாம் என்கின்ற வசதி வந்தும்!
** கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதங்களை அடைந்துயிருந்தும்!
** கடல்மேல் பயணம் மாறி கடல் கீழும் பயணம் பாயலாம் என்ற நிலைக்கு வந்தும்!
** ஆடு மேய்கின்றவனும் அலைபேசியை அடைந்துயிருக்கின்ற அதிசியம் நிகழ்ந்தும்!
** காரு போகாத ஊருகளுக்கெல்லாம் கணினி சென்றுவிட்ட கலியுலகை அடைந்திருந்தும்!
** மனிதன் மட்டும் ஏன் இன்னும் வேற்றுமையில் மூழ்கியிருக்கிறான்?
** ஆகாயத்தையே ஆராய்ச்சி செய்கிறாய் பிறகேன் இன்னும் அறியாமையில் இருக்கிறாய்?
** நாமெல்லாம் ஒரே தாய் தந்தையருக்கு பிறந்தோம் என்று உமக்கு தெறியாதா?
** பிறகு ஏன் பிரிவினை? நன்றாக உணர்ந்து கொள் உன்னை!
** இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம் அழைக்கிறது உன்னை !!
** புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி !!!
வாழ்க்கையென்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகமூடிகளைக் காட்டவென வைத்திருக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் அழகாகவும், கோரமாகவும் தனது முகத்தை மாற்றி மாற்றிக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. அந்த முகங்களில் புன்னகையைத் தேடியபடியே ஒவ்வொருவரது பயணமும் நீடிக்கிறது அலைச்சலாகவும் நேரானபாதையிலும்.
உலகில் இரு பிரிவினரே உள்ளனர். வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் ஒரு பிரிவினர். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் மற்றப் பிரிவினர். தொடரும் ஒவ்வொரு பிரிவும் இவ்விரண்டு பிரிவுகளிலிருந்தே கிளைகளாகப் பிரியத் தொடங்குகின்றன. அவை எண்ணற்ற கிளைகளாகி வளர்ந்துகொண்டே செல்கின்றன. ஒவ்வொரு கணத்திலும் மரணம் பின் தொடரும் வாழ்வின் பாடல் ஓயாமல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
மனிதர்களுடைய வாழ்க்கை முழுவதையும் வணக்கமாக்கிய உலகின் ஒரேயொரு மார்க்கம் எமது இஸ்லாமிய மார்க்கம் மாத்திரமேயாகும்’
எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.
உலகில் பல மாதிரியான தவறுகள் நடந்தவன்னம் தான் இருக்கின்றது, அதை தடுப்பதற்கு பல சட்டங்கள் இருந்தும் அவற்றால் சரிவர செயல் பட முடியவில்லை என்பதே தெரிகிறது. இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன? பலரிடம் இறையச்சம் இல்லாமையே காரணமாக இருக்கின்றது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், ஈவ்டீசிங், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, விபச்சாரம், லஞ்சம், மனித உமை மீறல்கள் இது போன்ற குற்றங்களைத் தடுக்க வகைவகையான சட்டங்கள் இருந்தும் மனிதனைத் தவறிலிருந்து மீல வைக்க முடியவில்லை. அது ஒருகாலும் நம் சட்டத்தால் முடியாது.
அப்படியெனில் உலகில் மலிந்து கிடக்கின்ற குற்றங்களைக் களையெடுக்க, வேரோடு அழிக்க முடியவே முடியாதா? இத்தீமைகள் ஒவ்வொரு நாளும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா? இதற்கு ஏற்ற தீர்வு தான் என்ன? என்ற கேள்வி நமக்குள் தோன்றலாம், இதை அழகாகவும் தெளிவாகவும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.
இஸ்லாம் கூறுகின்றது, எவ்வளவு கொடிய தவறாக இருந்தாலும் அதை எளிய முறையில் தடுக்க முடியும் மனித சட்டங்களால் அல்ல! நம் மனதில் மறைந்து கிடக்கும் இறையச்சத்தால் மட்டுமே!
குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)
''இறைவன் உங்கள் தோற்றத்தையோ உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
0 comments:
Post a Comment