Comments

மாவட்ட செய்திகள்

விடுமுறையைக் கொண்டாட விசுவக்குடி(டேம்)க்கு வாங்க...!

வாய்க்கால் தண்ணீருக்கே வக்கில்லாத பெரம்பலூர் மாவட்டத்தில், ஆறேழு வருடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் செல்லுகிற, ஐந்தாறு ஆறுகளும் உள்ளதென்பது ஆச்சர்யமூட்டும் தகவலாகும்...!

கல்லாறு, சின்னாறு, மருதையாறு, கோனேரியாறு, வேதநதி, வெள்ளாறு என்றிருந்தாலும், காற்றழுத்தத்தாழ்வு நிலைகளின்போது கருத்தரித்து, கரைபுரண்டு கடலுக்குச் சென்று காணாமல்போவதே அதன் கடந்தகால வரலாறுகளாகும்...!


விடிய விடிய பெருக்கெடுத்துச் சென்று, வீணாகும் தண்ணீரை விசுவக்குடியிலேயே தேக்க வேண் டுமென வெள்ளைக்காரன் காலத்தி லேயே வேண்டுகோள் எழுந்தது.


மலையாளப்பட்டி அருகே அணை கட்ட மறுப்புதெரிவித்ததால், விசு வக்குடிக்கு அந்தவாய்ப்பு வீடு தேடியே வந்தது. மற்றபடி கொட்டும் மழைநீரை நம்பியே கொட்டரை நீர்த்தேக்கம் என்பதெல்லாம் தரேஷ்அகமதுவால் நமக்குத் தாரைவார்க்கப் பட்டது தான்.


விரும்பிய கோரிக்கையொன்று விசுவக்குடியில் நிறைவேறியதால் திரும்பிய திசையெல்லாம் இனி அரும்பிய பயிராகும், அதனால் நிரம்பிய வயிராகும் என்பது ஏழை விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்பது எத்தனை பேருக்குத்தான் தெரியும்...


செவந்துநிற்கும் செம்மலையைப் பரந்துவிரிந்த பச்சை(மலை) தேகத் துடன் பற்றியிருக்கி, கருங்கல் கரங் களால் கட்டியணைத்து நிற்கும் காளையைப் போன்றதொரு கண் கொள்ளாக் காட்சிதான் கண்முன் தெரிகிறது...


விடுமுறை நாட்களை வீட்டாருடன் சேர்ந்தே விரும்பிக் கழிக்கிற, பெரம்பலூர் மாவட்டத்தினருக்குப் பெரு மகிழ்வைத் தருகிற, சுகமானதொரு சுற்றுலாத் தலம் இதுவாகும். விடலைகளுக்குக் கடலைப்போல காட்சி தரும் கல்லாறு அணைக்கட்டு...!!!


 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.