Comments

தமிழக செய்திகள்

வெள்ள நிவாரணத்தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!


குடிசைகளுக்கு 50ஆயிரம்;

நடுத்தரவர்க்கத்திற்கு 1லட்சம்

- வெள்ள நிவாரணத்தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்!
- தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!
...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் குடிசைகளை இழந்தோருக்கு ரூ.10 ஆயிரமும், நிரந்தர வீட்டில் வெள்ள பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரணத்தொகையானது போதாது; அவரவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கவனத்தில் கொண்டு நிவாரணத்தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

குடிசை வீடு இழந்தவர்களுக்கு 50ஆயிரம் தேவை:

குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு குடிசைகளை அமைக்கவும், அத்துடன் அவர்கள் வெள்ளத்தில் இழந்த அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் 50ஆயிரம் ரூபாயை நிவாரணத்தொகையாக உயர்த்தி வழங்க வேண்டும்.

நடுத்தரவர்க்கத்திற்கு 1லட்சம்:

அதுபோல வீடுகள் இருந்தும் பொருட்களை இழந்தவர்களுக்கு 5ஆயிரம் ரூபாய் போதவே போதாது. இந்த நடுத்தரவர்க்கத்தினர் குடிசைகளில் இருந்து பொருட்களை இழந்தவர்களைவிட பலமடங்கு இழப்பை அடைந்துள்ளனர். அவர்களது வீட்டில் உள்ள எலட்ரானிக் பொருட்கள், டிவி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், ஷோபா உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமடைந்து குப்பைத்தொட்டிக்குச் சென்றுள்ளது. இந்த பாதிப்புகளைக் கவனத்தில் கொண்டு இத்தகைய நடுவர்க்கத்தினருக்கு 1லட்சம் ரூபாய் இழப்பீட்டு நிவாரணத்தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அப்படியானால் அந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஐந்தாயிரமும், 10ஆயிரமும் எப்படி மக்களுக்கு போதுமானதாக இருக்கும் என்பதை மனசாட்சியோடு சிந்தித்து தமிழக அரசு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுக்கின்றது.

மேலும் பள்ளிக்குழந்தைகளின் நோட்டுப்புத்தகங்கள் அனைத்தும் வெள்ள நீரில் வீணாகிவிட்டது. இதையும் கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து மாணவ மாணவியருக்கும் சீருடை உள்ளிட்ட அனைத்து தேவையான பொருட்களையும் மீண்டும் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுக்கின்றது.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.