Comments

இந்தியா

இந்தியாவின் நெ.1 பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.தான்... மகாராஷ்டிரா IG குற்றச்சாட்டு...

கொல்கத்தா: இந்தியாவின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கமே ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் என்று மகாராஷ்டிரா மாநில முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிப் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இது தொடர்பாக
 
நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:


நாட்டின் நிகழ்ந்த 13 பயங்கரவாத சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பஜ்ரங் தளம் போன்ற இதர அமைப்புகளையும் சேர்த்தம் மொத்தம் 17 வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா இயக்கத்தினர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்தியாவின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 2007ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் 2006 மெக்கா மஸ்ஜித் மசூதி குண்டுவெடிப்பு, 2007ஆம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, 2008 மலேகான் குண்டு வெடிப்பு ஆகிய சம்பவங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது பிராமணிய கட்டமைப்பைக் கொண்டது. இது பிரமாணர்களை குறிப்பிட்டுச் சொல்வது அல்ல.. பிராமணியம் என்பது சித்தாந்தம்... அதாவது ஆதிக்கம் செலுத்துவதும் ஒடுக்குவதும் பிராமணியத்தின் பிரதான அம்சம்.சகிப்பின்மை என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது. இப்போது ஏன் இதை பெரிதாக்குகின்றனர் எனத் தெரியவில்லை? 2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதின் மூளையாக உளவுத் துறை இருக்கிறது. மக்கள் இயக்கமாக ஒன்றுதிரண்டால்தான் கர்கரே மரணத்தின் உண்மையை கொண்டுவர முடியும்.இவ்வாறு முஷ்ரிப் கூறினார்.
 
பார்க்க....
 
நன்றி: ஒன் இந்திய

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.