Comments

இந்தியா

கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை இனி பயன்படுத்த முடியாது ..!

கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை இனி பயன்படுத்த முடியாது



புதுடெல்லி, நவ. 26-

திருத்தி கொள்வதற்காக மத்திய அரசு வழங்கிய கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை இனி பயன்படுத்த முடியாது.

உலகில் உள்ள அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் வரும் ஆண்டுகளில் இருந்து எந்திரங்களே சரிபார்க்கும் பாஸ்போர்ட்டு (கடவு சீட்டு) வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க அகில உலக விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்தது.

அகில உலக விமான அமைப்பின் உத்தரவை ஏற்று கையால் எழுதிய பாஸ்போர்ட்டுகளை மாற்றிக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

கடந்த 1995, 1996-ம் ஆண்டுகளில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கையால் எழுதப்பட்ட ‘பாஸ்போர்ட்டு’கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அதனுடைய கால அவகாசம் நவம்பர் 24-ந்தேதி வரை வழங்கப்பட்டது.

அதற்கு முன்பாக கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை, சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட்டு அலுவலகங்களில் வழங்கிவிட்டு புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது. பின்னர் அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த செவ்வாய் கிழமை(24-ம் தேதி) உடன் நிறைவடைந்தது.  எனவே இனி கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.