Comments

வளைகுடா

அமீரக வாள் தமிழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி....!!


உலக இருதய தினம் வரும் செப்டம்பர் 29 ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி துபாய் மற்றும் ஷார்ஜா Zulekha Hospital நிர்வாகம் வரும் செப்டம்பர் 29 ம் தேதி அன்று இலவச மருத்துவ சேவை அளிக்க உள்ளது. இதன்படி cholesterol, blood sugar & Press...ure, BMI போன்ற நோய்களுக்கு இலவச சோதனைகளும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும்.

06 - 565 8867 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு, முன் பதிவு செய்து அனைவரும் இந்த இலவச மருத்துவ சேவையை பெறுங்கள்.


இருதய நோய் - ஓர் பார்வை :

இன்றைய சூழலில் இருதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உலகில் இருதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

இது 2030ல் 2 கோடியே 30 லட்சமாக உயரும் எனவும் உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 80 சதவீத மாரடைப்புகள், தடுக்கக் கூடியவை.

இரவுப் பணி, முறையற்ற உணவு பழக்கம், அதிக நேர பணி, குடும்பத்தில் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கின்றன. உலகில் மாரடைப்பால் இறப்பவர்களில், 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் இருதயத்துக்கு செல்லும் ஒட்சிஜன் அளவு குறைகிறது.

புகை பிடிப்பவர்கள், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன் ஆதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய நோய் ஏற்படலாம். சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

* புகை பிடிப்பதற்கு நோ சொல்லுங்கள்.

* உப்பு அதிகம் பயன்படுத்துவதால் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இதய நோய் வாய்ப்பு அதிகரிக்கிறது.

* ரத்தத்ததில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும்.

* யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இருதய நோயிலிருந்து பாதுகாக்கும்.

* முடிந்தளவு எஸ்கலேட்டர், லிப்ட் ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு சராசரியாக, 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். * காய்கறிகள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.

* சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, இதய நோயிலிருந்து விடுபடுவதற்கு சிறந்த மருந்து.




About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.