Comments

இஸ்லாம்

ஈமான் பலமும் -பலவீனமும்..!

Image result for ஈமான் பலமும் -பலவீனமும்அல்லாஹ்வே! (எனது) இரட்சகன் , இஸ்லாமே எனக்கு வழிகாட்டும் மார்க்கம், முஹம்மதே அல்லாஹ்வின் தூதர் என்று எவர் மனப்பூர்வமாக பொருந்திக் கொள்கிறாரோ அவர்தான் ஈமானின் (நம்பிக்கையின்) இன்பத்தை அடைவார்
ஆதாரம்: நூல் : மிஷ்காத் )
...
இந்த உலகத்தில் அல்லாஹ் செழிப்பான வாழ்வை தான் விரும்பியவருக்கும் , விரும்பாதவருக்கும் கொடுக்கிறான் . ஆனால் தான் அன்பு கொண்டவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு ஈமான் உறுதியை பக்தி ஒழுக்கத்தையும் கொடுப்பதில்லை .
அல்ஹதீஸ்)

ஈமான் கொண்டவர்களின் இதயம் அல்லாஹ்வின் இரண்டு விரலுக்கிடையில் இருக்கின்றது .(இவர்களின் நடைமுறைக்குத் தக்கவாறு அவர்களை இயங்கச் செய்கின்றான் )
நூல்: இஹ்யா )

மக்களின் தன்மானம் பாதிக்கும் வண்ணம் அவர்களை குறை கூறுபவனும் வீண் பழி சுமத்துபவனும் வாயாடித்தனமாக பேசுபவனும் பூரண ஈமான் கொண்டவனாக மாட்டான் .
நூல்கள்: திர்மிதி , )

பிற்காலத்தில் அறிவு குன்றிய இளம் வயதுடைய கூட்டத்தினர் வருவார்கள் ! அவர்கள் நபி மொழிகளிருந்து பேசுவார்கள் . வில்லில் இருந்து அம்பு விடுவதுபோல இஸ்லாத்திலிருந்து அவர்கள் விடுபட்டு விலகிச் செல்வார்கள் .
நூல்: புகாரி)

வாலிபர்களே ! விபச்சாரத்தை விட்டு பாதுகாப்புடன் இருங்கள்! (உங்கள் மர்மஸ்தானத்தின் மீது எச்சரிக்கையாக இருங்கள் ) மர்மஸ்தானத்தை மறைத்தவனுக்காக சொர்க்கம் தயார் செய்யப்பட்டிருக்கிறது .
நூல் ஹாக்கிம் )

மனத்தை அடக்கியாண்டு மறுமைக்குப் பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி , மனம் போன போக்கில் நடந்து கொண்டு இறைவன் அருளை எதிர்பார்ப்பவன் முட்டாள் !
நூல்: இஹ்யா )

நாவு நேர்மையாக இருக்குமானால் ஒருவனுடைய இதயம் நேர்மையான வழியில் செல்லும். நாவு நேர்மையற்றதாக இருக்குமானால் இதயம் நேர்மையான வழியில் செல்ல முடியாது.
நூல்:அஹ்மது )

ஒரு காரியத்தை நீர் செய்ய விரும்பினால் அதன் முடிவை எண்ணிப்பாரும் ! உம் சிந்தனையில் அதன் முடிவு நல்லதாக இருந்தால் அதைச் செய்வீர் இல்லையேல் அதை விட்டு விடும்!
நூல்:இஹ்யா )

ஒழுக்கமுள்ளவனாக இரு! மக்களில் நீயே சிறந்தவன் . போதுமென்று மனப்பான்மை உள்ளவனாக இரு ! மக்களில் நீயே நன்றியுள்ளவன் . உனக்காக் எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு ! நீயே உண்மையான முஸ்லிம் .
நூல்: இஹ்யா )

வெட்கமும் மௌனமும் ஈமானின் இரு கிளைகளாகும் . பழித்துரைத்தல் ஒழுக்கம் கெட்ட முரட்டுத் தனமான பேச்சுக்கள் ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்.
நூல்: ஹாக்கீம் அஹ்மது)

லஞ்சம் கொடுப்பவனையும் , லஞ்சம் வாங்குபவனையும் திரு நபி (ஸல்) சபித்தார்கள் .
நூல்: அபூதாவூது)

கியாமநாளில் கடுமையான சூரிய வெப்பமும் வியர்வையும் கொட்டுகின்ற நிலையில் அர்ஷின் கீழ் நிழலில் இருக்கும் பாக்கியசாலி யார் ? என்றால் கண்ணைக் கவரும் ஒரு அழகிய மங்கை தன் ஆசைகிணங்க அழைப்பு விடுக்கையில் இறைவனுக்கு பயந்து அவளை உதாசீனப் படுத்தி (அவளை ஆசைகிணங்க ) மறுத்து விடும் வாலிபரே ஆவார் .
நூல்கள்: புகாரி; முஸ்லிம்)

அன்புள்ள இஸ்லாமிய வாலிபர்களே ! இந்த ஹதீஸை ரொம்ப கவனமாக உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்! ஒருகால் ஏதாவது சந்தர்ப்பம் நேரிட்டால் அப்பொழுது இந்த ஹதீஸ் உங்கள் ஞாபகத்தில் வரணும் . அந்த பாக்கியசாலி என்றா பெயர் மறுமையில் கிடைக்கும், அல்லாஹ்வின் நிழலில் இடம் கிடைக்கும்!

ஈமான் கொண்ட மனிதனுக்கு அல்லாஹ்வின் பயத்திற்குப்பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுப் படுவாள் ! அவன் அவளை பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள் . அவன் கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள் . அவன் அவளை விட்டு வெளியேறினால் தன் கற்பையும் கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள் .
நூல் இப்னு மாஜா )

அன்பு இஸ்லாமிய சகோதரிகளே!
இந்த ஹதீஸை ரொம்ப கவனமாக பாருங்கள்! படியுங்கள்! இந்த ஹதீஸில் இறுதி வரிசையில் உள்ள வரிகளை நல்ல படியுங்கள்! நாம் ரொம்ப டீப்பாக போக விரும்பவில்லை . உங்களுக்கு நன்றாக புரியும்! அல்லாஹ் உங்களைப் பாதுக்காப்பானாக !!!

எந்த ஒரு மனைவி தன் கணவன் முகத்தில் (கோபக் குறியைக் காட்டி ) கடுகடுக்க பேசுவாளோ அவள் நாளை கியாம நாளில் கருகருத்த முகத்துடன் வருவாள் .
அல்ஹதீஸ்)

பெண்களே! நீங்கள் தருமம் செய்து வாருங்கள் அதிகமாக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேளுங்கள்! ஏனென்றால் , நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேன் என்று திரு நபி (ஸல்) அவர்கள் கூறிய போது பெண்களில் சிலர் காரணம் என்ன ? என்று வினவினர் . அதற்க்கு திருநபி (ஸல்) அவர்கள் நீங்கள் கணவன்மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள் , அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள் ! மார்க்க அறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகிறீர்கள் .உங்களில் அறிவாளிகளைக் காண முடியவில்லை என்று கூறினார்கள் .
அல்ஹதீஸ்)

அன்றுமுதல் , இன்றுவரை (இன்று கொஞ்சம் அதிகம்)சில மனைவிமார்கள் தன் கணவன்மார்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . காரணம் அந்தளவுக்கு ரொம்ப மோசமாக இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறோம் . சில பெண்கள் மார்க்க விடயத்தில் ரொம்ப அறிவு குறைவாக தான் இருக்கிறார்கள் என்பதில் நிறைய விஷயத்தில் நாம் பார்க்கிறோம். மூடநம்பிக்கை , அனாச்சாரம், புது புது நூதன காரியம் (திருமணம், தர்கா , விழாக்கள் , இன்னும் பல ) சமீபத்தில் ஒடுக்கத்து புதன் . அந்த நாளில் நிறைய பெண்கள் தர்கா சென்று , கடற்கரை போய் இன்ன இன்ன மூடநம்பிக்கை பிரகாரம் செய்கிறார்கள் . ஒடுக்கத்து புதனுக்கும் , மார்க்கத்துக்கும் என்ன சம்பந்தம் ? அங்கே நிறை கூற்றுக்கள் அரேகேற்றம் செய்யபடுகிறது .

About Jiyavudeen Abdul Subhahan

0 comments:

Post a Comment

Powered by Blogger.