Comments

குவைத் ஜும்ஆ தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு:

குவைத்: குவைத் நகரத்தில் உள்ள அல் இமாம் அல்-சத் என்ற ஷியா பிரிவு மசூதியில் இன்று நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்-சத் மசூதியில் வெள்ளிக்கிழமையான இன்று 2000திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். மண்டியிட்டு அவர்கள் தொழும்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

நடந்த சம்பவத்தை உணரும் முன்போ ஏராளமானோர் ரத்த காயங்களுடன் சாய்ந்தனர். பலர் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குவைத் எம்.பி கலீல் அல் சலீக், மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக கூறினார். 30 வயது மதிக்கத்தக்க மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு குவைத் மன்னர் ஷேக் சபா அல் அகமது உடனடியாக விரைந்தார். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டதோடு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும் உத்தரவு பிறப்பித்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் மசூதியை சுற்றியுள்ள மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ரத்தம் வழிய வழிய படுகாயங்களுடன் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.



About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.