Comments

இஸ்லாம்

அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை-அமெரிக்க ஆய்வில் தகவல் !

எனது தாத்தாவுக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. முடிந்த வரை பள்ளியில் சென்று தொழுது வருவதை நான் பார்த்துள்ளேன். சில வருடங்களுக்கு முன் மதிய தொழுகை தொழுது விட்டு அவர் வீடு செல்வதற்கு பதில் எங்கள வீட்டு பக்கம் வர ஆரம்பித்துள்ளார். எனது நண்பன் இவர் ஞாபக மறதியில் தெரு
மாறி செல்கிறார் என்பதால் 'என்ன தாத்தா? தெரு மாறி செல்கிறீர்கள்? உங்கள் வீடு அடுத்த தெரு' என்றவுடன் தாத்தா சுதாரித்துக் கொண்டு 'ஹி...ஹி...எனக்கு தெரியும் தம்பி. என் மக வீட்டுக்கு போறேன். வேறொன்றுமில்லை' என்று சிறிது தூரம் நடந்து பிறகு வந்த வழியே திரும்பி சென்றிருக்கிறார். என் நண்பன் என்னிடம் 'உன் தாத்தாவுக்கு குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை என்ற கதை தான். எப்படியாவது சமாளித்து தான் கண்டிஷனில் இருப்பதாக காட்டிக் கொள்வார்' என்றான் சிரித்துக் கொண்டே....

About super

0 comments:

Post a Comment

Powered by Blogger.