Comments

வளைகுடா

செப்.15 சென்னையிலிருந்து முதல் விமானம் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் இந்த ஆண்டு 3 ஆயிரம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வர்

தமிழக ஹஜ் புனித பயணத்திற்கான முதல் விமானம் வரும்செப்டம்பர் மாதம் 15-ம் தேதிபுறப்படவுள்ளதாக தமிழக ஹஜ்கமிட்டி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர் முகமது ஜான் எம்எல்ஏ, தமிழ்நாடு வக்புவாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், தமிழக ஹஜ் குழுசெயலாளர் முகமது நசீமுத்தின், ஹஜ் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்தாண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகள் குறித்தும்,மேற்கொள்ள வேண்டிய பணிகளும் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஹஜ்பயணிகளுக்கு விமானநிலையத்தில் ஏற்படும் சிரமங்களை சரி செய்வதற்காக விமானநிலைய அதிகாரிகள், சவுதி ஏர்லைன்ஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் பெறப்பட்டன.
கடந்தாண்டு 3800 ஹஜ் பயணிகள் தமிழக அரசின் சார்பில் ஹஜ் பயணம் செய்திருந்த நிலையில் தற்போது மெக்காவில் பரமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு தமிழக அரசின் சார்பில் 3ஆயிரம் ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இவர்களுக்கு அந்தந்த மாவட்டம் மற்றும் சென்னையில் மருத்துவ முகாம் எந்த தேதிகளில் நடத்தவுது. எபேலோ நோய் வெளிநாடுகளில் பரவி வருவதால், ஹஜ் பயணம் முடிந்துவரும் போது பயணிகளுக்கு முழு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது இதில் விவாதிக்கப்பட்டது. ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் ஜம்ஜம் தண்ணீர் 10லிட்டரில் இருந்து, இந்தாண்டு 5லிட்டர் ஜம்ஜம் தண்ணீர் மட்டுமே வழங்கமுடியும் என சவுதி அரசுசார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது, இதனை ஹஜ் பயணிக ளுக்குபிரித்து வழங்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறை, மேலும் ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டும் முகாம் விரைவில் மாவட்டங்களில் நடத்த முடிவு செய்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

About super

0 comments:

Post a Comment

Powered by Blogger.