Comments

வளைகுடா

மதீனாவைக் காக்க மதீனா சிவில் அவசரப் படை தயார்!



தற்பொழுது வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் பதட்ட சூழ்நிலையைத் தொடர்ந்து,  முக்கிய இடங்களில் அவசர பாதுகாப்பு நடடிவக்கைகளை சவுதி அரேபியா மேற்கொண்டு வருகின்றது. தற்பொழுது முப்பதாயிரம் இராணுவத்தினர் சவுதி-ஈராக் எல்லையில் தயார் நிலையில் நிற்கின்றனர்.
இதற்கிடையில், புனித ஆலயங்களில் ஒன்றான மஸ்ஜிதுன் நபவி அமைந்திருக்கும் மதீனா நகரைப் பாதுகாப்பதற்காக விசேட சிவில் அவசரப்படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
‘இந்த நடமாடும் படைப்பிரிவினர் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் மதீனாவின் 28 நிலையங்களில் இருந்து தங்களது கடமைகளைச் செய்வர். மேலும் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயற்படுவர்’ என்பதாக மதீனாவின் சிவில் பாதுகாப்பு இயக்குனர் மாஜி. ஜெனரல் சுஹைர் பின் அகமட் ஹாஸிம் ஸீபா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘மதீனா நகரைச் சூழவுள்ள கடைத்தொகுதிகள், உணவுதயாரிக்கும் நிலையங்கள் போன்றவற்றையும் சோதிப்பர். அது போக ஹோட்டல்களில் தங்கியிருப்போர், மஸ்ஜிதுல் நபவிக்கு வந்து செல்வோர் போன்றவர்களிடமும் விசேட அவதானங்கள் செலுத்தப்படுவதுடன், இப்பாதுகாப்பு பிரிவினர் முதன் முதலாக மதீனாவின் பிரதான வீதிகளிலும் பாதுகாப்புக் கடமைகளில் இருப்பார்கள்’ எனவும் அகமட் ஸீபா தெரிவித்தார்.
‘மேலும், மக்கள் ஒன்றித்து கூடக்கூடிய சுப்பர் மார்க்கட், மோல், வர்த்தகத் தொகுதிகள் போன்றவற்றிலும் தங்களது கண்காணிப்புக்களை மேற்கொள்வர். வீதி ரோந்து வாகனங்களிலும் இப்படையினர் செயற்படுவார்கள்’.
‘ஐந்து உத்தியோகத்தர்கள், ஐம்பது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் 139 ஏனைய உத்தியோகத்தர்களும் இப்பிரிவில் செயற்படுவார்கள்’.
‘புனிதமான ரமழானை மஸ்ஜிதுல் ஹரத்தில் மக்கள் எந்தவொரு அச்சுறுத்தலுமின்றி தங்களது வணக்கங்களைப் புரிவதற்காகவே இப்படையினர் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்றனர். அவசரத் தேவைக்காக இப்படையினர் எந்நேரத்திலும் தயார் நிலையில் இருப்பார்கள்’ எனவும் ஜெனரல் ஹாஸிம் ஸீபா தெரிவித்தார்.
‘சவுதி மக்கள் அனைவரும் சவுதி அரேபியாவையும், இஸ்லாத்தையும் காக்க தங்களது உள்ளுர் அமைப்புக்களுடாக ஒத்துழைக்க வேண்டும்’ என கடந்தவாரம் சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முப்தி அப்துல் அஸீஸ் மக்களைக் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

About super

0 comments:

Post a Comment

Powered by Blogger.