Comments

இந்தியா

இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-விசா! மத்திய அரசு புதிய திட்டம்!

இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-விசா எடுத்துக்கொள்ள மத்திய அரசு 40 நாடுகளுக்கு அனுமதியளிக்க உள்ளது.
இதனால் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து, அதன்காரணமாக உள்நாட்டு வணிகர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரானிக் சுற்றுலா அங்கீகார (இடிஏ) திட்டப்படி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இனையத்தளம் மூலமாக விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். அதைப்போல, ஐந்து வேலை நாட்களுக்குள் விசா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை இனையத்தளம் மூலமாக தெரியப்படுத்தப்படும்.
இந்த திட்டத்துக்கு, வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிரதமர் அலுவலகம் அனுமதியளிக்கும் என்று தெரிகிறது. விசா சீரமைப்பு திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட மொத்தம் 40 நாடுகளுக்கு இதுபோன்ற அனுமதி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து டெல்லியை சேர்ந்த சுற்றுலா முகவர்களின் அதிபர் ஜோதி கபூர் கூறுகையில், “சுற்றுலா துறை வளர்ச்சிக்கு  விசா விதிமுறைகளின் தளர்ச்சி அவசியம்.
“இ-விசா” திட்டத்தால் சுற்றுலா பயணிகள் வருகை அடுத்தாண்டில் சுமார் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்” என்றார். ஆப்கானிஸ்தான் நாட்டினரை அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரையில், இந்தியாவில் தங்க அனுமதிக்கவும் விசா விதிமுறை தளர்த்தப்பட உள்ளது.
அதே வேளையில், இதை வைத்து குற்றச்செயல்களில் பிற நாட்டினர் ஈடுபடாமல் தடுக்கவும் போதிய கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

About super

0 comments:

Post a Comment

Powered by Blogger.