Comments

பொதுவானவை

மோசடி விளம்பரங்களால் பணம் இழக்கும் பரிதாபம்: 'டிவி' பார்க்கும் பெண்களே... உஷார்

நாட்டில் பல்வேறு வகைகளில் மோசடிகள் நடந்து வருகின்றன. தற்போது டி.வி., சேனல்களில் ஒளிபரப்பாகும் 'டெலி ஷாப்பிங்' என்ற பெயரில் புதுவித மோசடி நடந்து வருகிறது. 'டிவி'., சேனல்களில் அரை மணி நேரம் தனியார் விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு, அவர்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். 

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன் 'இந்த நிகழ்ச்சிக்கும், டிவி., நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை' என ஒரு சில நொடிகள் காண்பித்து விட்டு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை குறித்து விளம்பரம் செய்கின்றனர் .அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் இவர்கள், 


கூறும் போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு விட்டால் போதும், தினமும் நமக்கு வரும் தொந்தரவிற்கு அளவே இல்லை.ஆண்கள் போன் செய்தால் பெண் குரலில் மயக்கும் தொனியில் ஆசை வார்த்தைகளில் பேசி பொருட்களை வாங்க செய்கின்றனர். பெண்கள் போன் செய்தால் ரூ. 2 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கினால், ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் 'இலவசம்' என ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.

சிவகங்கை, திருப்பாச்சேத்தியை சேர்ந்த கீதா என்பவர், ஒரு டி.வி., சேனலில், 2,999 ரூபாய்க்கு, 9 சேலைகள் தருவதாக ஒளிபரப்பான விளம்பரத்தை பார்த்து விட்டு, அதில் கூறப்பட்ட நம்பருக்கு போன் செய்தார். பின்னர் அதை மறந்து விட்டார். 


அதன்பிறகு அவருக்கு தொடர்ந்தது தொல்லை. காலை முதல் ஒரு நம்பரில் இருந்து தொடர்ந்து ''சேலைகள் புதிய டிசைனில் உள்ளது; 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலைகள், ரூ2,999க்கு தருகிறோம்,'' என போன் செய்து ஆசை காட்டியுள்ளனர்.'வேண்டாம்' 

என மறுத்தாலும், விடாமல் தினமும் போன் செய்து 'டார்ச்சர்' செய்துள்ளனர். ஆண், பெண் என பல குரல்களில் மாறி மாறி பேசி ஆசை வார்த்தை கூற, வேறு வழியின்றி தனது முகவரியை கொடுத்துள்ளார். மறுநாளே, 'உங்கள் முகவரிக்கு வி.பி.பி., மூலம் பார்சல் அனுப்பி உள்ளோம். தபால் அலுவலகத்தில் பணம் கட்டி பெற்றுக் கொள்ளுங்கள்,' என போனில் கூறியுள்ளனர்.

இதை நம்பி திருப்பாச்சேத்தி தபால் அலுவலகத்திற்கு சென்று பணம் செலுத்தி, பார்சலை வாங்கி வந்து பார்த்தால், சேலைக்கு பதில் கிழிந்த துணியும், சில இந்தி புத்தகங்களும் இருந்தன. 


இதை பார்த்ததும் நொந்து போய்விட்டார் கீதா. மறுபடியும் அந்த நம்பருக்கு போன் செய்து கேட்டால், 'நாங்கள் சரியாகத்தான் அனுப்பினோம். தபால் அலுவலகத்தில் எடுத்திருப்பார்கள்,' என கூலாக பதில் சொல்லியுள்ளனர்.

தபால் அலுவலகத்தில் பணியாற்றுபவர் எனது சகோதரர் என சொல்லி விட்டு, கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக கீதா கூறியதும், 'என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்,' என சொல்லி போன் இணைப்பை துண்டித்து விட்டனர். இது போல சிவகங்கை மாவட்டத்தில் பல பெண்கள் ஏமாந்துள்ளனர்.

About super

0 comments:

Post a Comment

Powered by Blogger.