Comments

ஊர்செய்தி

காசு… பணம்… துட்டு… MONEY..MONEY..!



வி.களத்தூரில் சந்தனக்கூடு சிறப்பாய் விழா நடைப் பெற்றது! சந்தனக்கூடு மார்க்கத்தில் சரியா? தவறா? என்றால்.. சிலர் சில காரணங்களுக்காக நியாயப்படுத்தினாலும்... ‘மார்க்கத்தில் இல்லாத ஒன்றுதான் என்பதிலும், நிச்சயமாய் தவறுதான் என்பதிலும் யாருக்கும் இருவேறு கருத்தில்லை’ என்பதே உண்மை! பெரும்பாலானோர் இதை ஒரு விழாவாக... பொழுதுபோக்குக்காக ஏற்றுக்கொள்கிறார்களே தவிர, இது மார்க்கத்தில் சரிதான் என்று யாரும் கூறுவதாக தெரியவில்லை. இது மாற்று மத தழுவல் என்பதில் அனைவரும் தெளிவாகவே உள்ளனர்.

பொதுவாகவே “விழாவே” தவறுதான் என்றாலும்... ‘தர்காவுக்கு உள்ளே... தர்காவுக்கு வெளியே..’ என இரண்டு விதமாய் பார்க்க வேண்டியுள்ளது. தர்காவுக்கு உள்ளே நடக்கும் கூத்துக்கும், தர்காவுக்கு வெளியே நடக்கும் கும்மாளத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன! “அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்” (ஷிர்க்) என்பது தர்காவுக்கு உள்ளே நிகழும் நிகழ்வேயாகும். இதற்கு.. வருங்கால சமுதாய தலைமுறையை வார்த்தெடுக்கும் ஆசான்களே துணைப்போவது என்பது வேதனைக்குறியது. தர்காவுக்குள்ளே அவுலியா(?)வுக்கு பக்கத்தில் அமர்ந்து, மௌலிது ஓதும் நால்வருமே பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுத்து பாடம் எடுக்கும் ஹஜ்ரத்மார்கள். இவர்களே பித்அத்திலும் ஷிர்க்கிலும் மூழ்கிக் கிடக்கும்போது... மாணவர்களுக்கு இவர்கள் போதிக்கும் ‘மார்க்கம்’ என்னவாக இருக்கும். மதரஸாக்களில் ஓதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே போகிறது என்று வருத்தப்படும் நாம்... அவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களின் ‘மார்க்க அறிவு மற்றும் தரம்’ பற்றி கவலைக்கொள்வதில்லை!

மேலும்… மயில் இறகால் ஆசிவழங்கும் மகான் என்பவர்.. அரை லூசாகவும், மொல்லமாறி முடிச்சவிக்கியாகதான் இருப்பர்கள் போலும்..! சென்ற வருடம் அரைலூசு ஒலி முஹம்மது. இந்த வருடம் ‘கத்திக்குத்து’ ஜெக்கிரியா. பாவம்! இவர்களிடம் நல்(?)லாசிப் பெற ஒரு கூட்டம் அலை மோதியதை நினைக்கவே சிரிப்பாய் இருந்தது. ஆசி வழங்கியவருக்கென சிலர் காணிக்கை செலுத்தினர். தர்கா நிர்வாகி சையது பாய்... வரும் மக்களையும் உண்டியலையுமே மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்.

மக்கள் மார்க்கத்தை, புகழுக்காகவும், பொருளுக்காகவும், பணத்துக்காகவும் அடகு வைக்கும்வரை... நம் சத்திய மார்க்கம் மாற்றார்களுக்கு... நம் அப்பழுக்கற்ற மார்க்கம் அசத்தியமாகவே தெரியும்!


ஆக்கம்:வசந்தவாசல் அ.சலீம்பாஷா

About QUILLERZ TRENDZZ

1 comments:

  1. மில்லத்நகர்.காம் இணைய பக்க வடிவமைப்பு.. ‘பக்கா’வாக உள்ளது. மேலும்... இடம் பெறும் செய்திகளும் ‘நச்’சென இருக்கிறது. மென்மேலும் “மேன்மை”யுடன் வளர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.