Comments

பிளஸ் 2 தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் 5 மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை


ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவ–மாணவிகள் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இந்த ஆண்டும் வேதனை அளிக்கும் விஷயமாக 5 மாணவிகள் தங்களது இன்னுயிரை போக்கியுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடகால் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வீரராகவனின் மகள் கவுசல்யா. கணிதத்தில் 48 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தார்.
சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணையை சேர்ந்த சுகன்யா, ஊட்டி தலைக்குந்தா பகுதியை சேர்ந்த மாணவி கவிதா ஆகியோர் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
திருவாரூர் அருகே மூலமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி லட்சாதிபதியின் மகள் அகிலா, 575 மதிப்பெண்கள் எடுத்து தேர்வில் வெற்றி பெற்ற நிலையிலும் மார்க் குறைவாக இருந்ததால் மண்எண்ணை ஊற்றி தீக் குளித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த ஏரிக்காடு பகுதியை சேர்ந்த மாணவி சுதாவும் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
/*/*/ விலை மதிப்பிலா உயிரை மாய்த்து கொள்ளும் இந்த இளம் தளிர்கள் , மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்ற தவறான எண்ணத்தில் இத்தகைய முடிவுகளை எடுப்பது வருந்ததக்கது , தேர்வுக்கு பின்பு மேற்படிப்புக்கு கவுன்சிலிங்க் ஏற்பாடு செயும் கல்வித்துறை , தேர்வு முடிந்து தேர்வு முடிவு வரும் முன்பு பள்ளிவாரியாக அந்தந்த பள்ளி நிர்வாகத்தை கொண்டு படிப்பில் பின்தங்கி இருந்த மாணவ மாணவி களுக்கும் அவரகளது பெற்றோருக்கும் கவுன்சிலின்க் ஏற்பாடு செய்தால் இது போன்ற இறப்புகள் தடுக்கப்படுமா ?

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.