Comments

வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புகள் !


மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களில் மிகமுக்கியமானவைகளில் ஒன்று வெகுதூரத்தை விரைவில் கடந்துசெல்ல ஏதுவாக கண்டுபிடித்த இயந்திரங்களாகும்.

இந்தக் கண்டுபிடிப்பால்தான் உலகம் பரந்து விரிந்து அனைத்தும் தொடர்பில் இருக்கிறது. இல்லையேல் ஒவ்வொரு பகுதிகளிலும் மனிதர்கள் திட்டுத்திட்டாக தொடர்பில்லாமல் குறுகிய வட்டத்திற்குள் வாழும்படி ஆகி இருக்கும். வெற்றுப்பகுதியோ வேறு நாடுகளோ அறியாமல் போய் இருக்கும்.

மனிதன் இவ்வுலகில் ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்க்குச் செல்ல வேண்டுமானால் ஏதாவது ஒரு வாகனம் தேவைப்படுகிறது. பண்டைய காலப்பயணத்தை கால்நடையாக ஆரம்பித்து பிறகு கால்நடை விலங்கினங்களான ஒட்டகம்,குதிரை, கழுதை,மாடுகளென இவ்வகை விலங்கினங்களின் மேல் அமர்ந்து பயணம் மேற்க்கொள்ளப்பட்டு வந்தது.

பிறகு இவ்விலங்கினங்களை கட்டை வண்டியுடன் இணைக்கச்செய்து சற்று சவுகரிகமாக அமர்ந்து பயணத்தை மேற்கொண்டனர். இப்படித்தான் வெகுகாலமாக மனிதனின் பயணம் தொடர்ந்தது. பிறகு விஞ்ஞானமும், நாகரீகமும், படிப்படியாக வளர்ந்து மனிதனின் தேவைகள்கூடி பயணங்கள் துரிதமாகத் தேவைப்பட்டன. ஆகவே அதிவேகப் பயணத்திற்கான ஆயத்தத்தில் புதுப்புது கண்டுபிடிப்புக்களை கண்டுபிடிக்க அடியெடுத்து வைக்கத் தொடங்கினர். அதன் ஆரம்ப கட்டமாக மிதிவண்டியில் தொடங்கி ரிக்க்ஷா,மோட்டர் சைக்கிள்,ஆட்டோ,கார்,பஸ்,லாரி,கண்டினர்கள் என பற்ப்பல வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு சாலைகளில் பெருகி ஓடத்துவங்கின.அத்துடன் நீராவியால் இயங்கும் புகைவண்டி, டீசலில் இயங்கும் இரயில், மின்சார இரயில், இப்போது மெட்ரோ இரயில் என தண்டவாளத்தில் செல்லும் இரயில்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றியுடன் ஓட ஆரம்பித்தது.

அடுத்து பார்ப்போமேயானால் கடல் வழிப் பயணம் இது பண்டைய காலத்திலிருந்து இப்பயணம் மேற்க்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்பயணத்திற்கு கப்பல், பாய்மரக்கப்பல், விசைப் படகு, நாட்டு படகு என தண்ணீரில் பயணிக்க வசதியாக கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்துப் போக்குவரத்துப் பயணத்தையும் விஞ்சும் வகையில் ஹெலிகாப்டர், ஏரோபிளேன், .என அடுத்த இலக்கை ஆகாயத்தில் பறந்து சென்று விரைவுப்பயணம் மேற்க்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டது. நாடு விட்டு நாடு போகும் நாட்கணக்கான தூரத்தை 4,5 மணி நேரப்பயணத்தில் காலை உணவை தமது வீட்டிலும் பகல் சாப்பாட்டை பல்லாயிர மைலுக்கப்பால் இருக்கும் வேறு ஒரு நாட்டிலும் சாப்பிடும்படியான விரைவுப் பயணக்கண்டுபிடிப்பு ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்புதானே.!

இப்படி அசுர வேகத்தில் பயணிக்கும் அனைத்துப் பயணக்கருவிகளும் கண்டுபிடித்ததால் மனிதர்களின் நெடுந்தூரப் பயணங்கள் இலகுவாகவும் விரைவாகவும் அமைந்திருக்கிறது.

இத்தோடு நின்று விடாமல் இன்னும் அதிக தூரப் பயணமான விண்வெளிப் பயணம்,வேற்று கிரகமான சந்திரனுக்கு சென்றுவர ராக்கெட்பயணமென தொடர்ந்து அத்தோடும் முடிவு பெறாமல் இதுவரையான பயணக் கண்டுபிடிப்புக்கள் அனைத்தையும் விழுங்கும் அளவிற்கு எல்லாவற்றையும் விட வெகுதூரத்திலுள்ள வேற்று கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்திற்கு போய் மனிதர்களை குடியமர்த்த முயற்ச்சிக்கும் அளவுக்கு இந்தப் பயணக் கண்டுபிடிப்புக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவது மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கின்றது

அன்று நாள் முழுதும் பயணித்த தூரத்தை இன்று 1, 1/2, 1/4 மணிநேரத்தில் கணக்கிட்டுப் பயணிக்கும்படியான பயணக்கண்டுபிடிப்புக்கள் யாவும் வியக்கத்தக்கதேயாகும். ஒரு நிமிடம் சிந்தித்தால் மனிதனின் இந்தப் பயணக்கண்டுபிடிப்புக்கள் மிகவும் வியப்பில் ஆழ்த்தத்தான் செய்கிறது.!!!

About QUILLERZ TRENDZZ

1 comments:

Powered by Blogger.