Comments

ஜப்பானில் இன்று கடும் நிலநடுக்கம்

டோக்கியோ, மார்ச்.14–
ஜப்பானில் இன்று கடும் நிலநடுக்கம்
ஜப்பானில் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 2.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குயிஷு தீவின் வடக்கு கடற்கரை அருகேயுள்ள 4 பெரிய தீவு பகுதிகள் அதிர்ந்தன.
இதை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் படுக்கைகளில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர்.
எனவே அச்சத்தில் அலறியபடி எழுந்த மக்கள் நில நடுக்கத்தை உணர்ந்து அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
நில நடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. தண்ணீர் குழாய்கள் உடைந்தன. இதனால் நீர் பீறிட்டு பாய்ந்து ரோடுகளில் ஓடியது.
வீடுகள் இடிந்ததில் 18 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நில நடுக்கம் காரணமாக அப்பகுதியில் ஓடும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் தாமதமானது.
இங்கு 6.3 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஹான்சு மற்றும் ஷிகோகு தீவுகளிகளிலும் உணரப்பட்டது

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.