Comments

ரூபாய் நோட்டில் பேனாவில் எழுதினாலும் செல்லும், ஆனாலும் எழுதாதீங்க.. ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டில் பேனாவில் எழுதினாலும் செல்லும், ஆனாலும் எழுதாதீங்க..  ரிசர்வ் வங்கி

ஜனவரி 1  டெல்லி: ரூபாய் நோட்டுக்களில் எழுதினால் அது செல்லாது என்று இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. இருப்பினும் ரூபாய் நோட்டுக்களில் எழுதும் போக்கு குறைய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. ரூபாய் நோட்டுக்களை எப்படியெல்லாமோ நம்மவர்கள் பயன்படுத்துகிறார்கள். காதலிக்கு ஐ லவ் யூ சொல்வதற்கும், காதலி பெயரை எழுதுவதற்கும், வீட்டுக் கணக்கை எழுதுவதற்கும், எதையாவது படம் வரைவதற்கும் தாராளமாக பயன்படுத்துகிறார்கள். 
கையில் பேப்பர் இல்லாவிட்டால், ரூபாய் நோட்டில் முகவரியைக் குறித்துக் கொள்வது, செல்போன் எண்ணை எழுதுவது என்று கூட சிலர் திகிலடிப்பது வழக்கம். இந்த நிலையில்தான் ஜனவரி 1ம் தேதி முதல் ரூபாய் நோட்டுக்களில் பேனாவில் எழுதியிருந்தால் அந்த நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியானது. இதனால் பலர் பீதியடைந்தனர். ஆனால் அபபடியெல்லாம் இதுவரை தடை விதிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் கொடுத்துள்ளது. பேனாவால் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கு தடை விதிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எதுவும் எழுதாமல் ரூபாய் நோட்டை கையாளும் போக்கு அதிகரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கேட்டுக்கங்க மக்களே.. ரூபாய் நோட்டை பாழ்படுத்தாமல் இருக்க பழகிக் கொள்ளுங்க.

செய்தி: ஒன் இந்தியா

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.