Comments

ஊர்செய்தி

வி.களத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நோய் தடுக்க விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர் : மழை காலத்தில் போதிய மழை இல்லாததாள் கடும் பணி பொலிவு பொழிகிறது பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் வாய் பட்டு மருத்துவமனைகளில் குவிகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வி.களத்தூர் ஊராட்சி ஒன்றியம் முன்பாக விழிப்புணர்வு தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது .  கிராமப்புறங்களில் நோய் பரவல், கொசு உற்பத்தியை தடுக்க,விழிப்புணர்வு முகாம்களை நடத்த சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.கோடைகாலம் துவங்கும் முன் மழை துவங்கும். அப்போது, தெருக்களில் சேரும் குப்பை, பள்ளங்களில் தேங்கும் தண்ணீர், காலியிடங்களில் பரவிக் கிடக்கும் தேங்காய் சிரட்டை,டப்பாக்கள், பழைய டயர்களில் நீர் தேங்குவதால் டெங்கு, மலேரியா போன்ற நோய் கொசுக்கள் அதிக உற்பத்திக்கு வாய்ப்பு உண்டு. இதன்மூலம் டெங்கு, மர்ம காய்ச்சல் போன்ற நோய் பரவலாம். இவற்றை தடுக்க, நகர், கிராமப்புறங்களில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு முகாம்களை நடத்த சுகாதார பணிகள் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சுய உதவிக்குழுக்கள், பெண்கள் அமைப்பு, தொண்டு நிறுவனத்தினர், ஊராட்சி அமைப்புக்களை ஒருங்கிணைத்து இந்த விழிப்புணர்வு முகாம்களை நடத்த மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் தாக்குதல் பல இடங்களில் அதிகரித்தது.போதிய முன் தடுப்பு நடவடிக்கை இன்மையே இதற்கு காரணம் என, சுகாதாரத்துறையின் ஆய்வில் தெரியவந்தது. இவ்வாண்டுயும் கொசு உற்பத்தியை தடுக்க, பொதுமக்கள் ஒத்துழைக்கும் வகையில் விழிப்புணர்வு முகாம்களை நடத்துகிறோம். இதனால் பொதுமக்களை நோய் தடுப்பில் இருந்து பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம், என்றார். 

இடம்: வி.களத்தூர் ஊராட்சி ஒன்றியம்




About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.