Comments

டீசல் மற்றும் சமையல் கேஸ் விலையை மாற்றம் செய்ய முடிவு...



மாதந்தோறும் உயர்த்தபடும் டீசல்,மற்றும் சமையல் கேஸ் விலையில் நிர்ணயித்த அளவை விட மேலும் அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், மற்றும் மண்ணெண்ணை போன்ற பெட்ரோலிய பொருட்களை மானிய விலையில் விற்பனை செய்வதன் மூலம், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது இந்த இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் விலையை சர்வதேச நிலவரத்திற்கேற்ப, எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதே போல் டீசல் விலையையும் மாதந்தோறும் 50 பைசா உயர்த்தி கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த மே மாதம் முதல் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெயை கூடுதல் விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு லிட்டர் டீசல் விலை 11 ரூபாயும், சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 555 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.இதை அடுத்து மாதந்தோறும் 50 பைசாவாக உயர்த்தப்பட்டு வரும் டீசல் விலையை 1 ரூபாயாக உயர்த்தவும், இதே போல் சமையல் கேஸ் விலையை 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்படடுள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.