Comments

ஊர்செய்தி

வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்க


வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்
மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்


பெரம்பலூர், செப்.21-

வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 150 மாணவ மாணவியர் களுக்கு விலையில்லா சைக்கிள்களை மாவட்ட கலெக்டர். தரேஸ் அஹமது வழங்கினார்

விலையில்லா சைக்கிள்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவி யர்களுக்கு தமிழக முதல்வரின் விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச் செல்வன் முன்னிலையில்,¢ மாவட்ட கலெக்டர். தரேஸ் அஹமது 150 மாணவ மாணவியர்களுக்கு விலை யில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

நன்றாக படிக்க வேண்டும்

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் பேசுகையில் தெரிவித்ததாவது:-

தமிழக முதலமைச்சர் மாணவ, மாணவியர்களுக்கு வேறு எந்த மாநிலங்களிலும் செயல்படுத்தாத வகையில் இடைநிற்றலை தடுக்க ஊக்கத் தொகை, விலையில்லா மடிக் கணினி, விலையில்லா சைக் கிள், விலையில்லா சீருடைகள், விலையில்லா பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றார்.

இன்று வி.களத்தூர் அரசு பள்ளி மாணவ மாணவியர் களுக்கு விலையில்லா சைக்கிள், வழங்கப்படுகிறது. மேலும் பேருந்து பயண அட்டை, 2 செட் சீருடைகள், வழங்க உத்தர விட்டுள்ளார். கல்லூரி மாணவ, மாணவியர் களுக்கு படித்து முடிக்கும் முன்பே வேலை பார்க்க முழுத்தகுதியான நிலையில் இருப்பதற்காகவும், பொருளா தார முன்னேற்றம் பெறும் வகையிலான கல்வியை கற்க ஏதுவாக முதல்வர் மடிக் கணினியை விலையில்லா மல் அளித்து வருகின்றார். ஆகவே மாணவ மாணவியர்கள் தமிழக முதல்வர் வழங்கும் சலுகைகளை முழுமையாக பெற்று பயன் அடைந்து நன்றாக படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரி வித்தார். இந்நிகழ்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஆர்.மகாலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடா சலபதி, தலைமை ஆசிரியர்சங் கர், உதவி தலைமை ஆசிரியர் சுந்தரம் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வராணி ராயமுத்து,¢ ஊராட்சி மன்றத் தலைவர் நுரூல்குதா இஸ்மாயில் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

செய்தி:தினதந்தி

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.