Comments

மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில், மேலும் 2 கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை


பெரம்பலூரில், மேலும்
2 கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை
கலெக்டர் தகவல்



பெரம்பலூர், செப்.21-
பெரம்பலூரில் மேலும் 2 கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்தார்.
பெரம்பலூர் அருகே நடமாடி வரும் சிறுத்தைகளை பிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து கலெக்டர் தரேஸ் அகமது நிருபர்களிடம் கூறியதாவது:-
தீவிர கண்காணிப்பு
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் மேற்கு மலையில் நடமாடிய சிறுத்தைகளில் 4 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை சில நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
இந்நிலையில் 2 சிறுத்தைகள் நடந்து சென்றதற்கான கால் தடங்கள் இருப்பதாகவும், பெரம்பலூர் புறநகர் பகுதிகளான வடக்கு மாதவி, எளம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 2 கூண்டுகள்
சிறுத்தையை பிடிக்க கவுல்பாளையத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டு நேற்று அம்மன் நகர் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் 2 கூண்டுகள் வண்டலூரிலிருந்து இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) கொண்டுவரப்பட்டு சிறுத்தைகள் நடமாடுவதாக கூறப்படும் பகுதியில் வைக்கப்படும்.
பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ‘தண்டோரா’ மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் வனத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்து தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.



செய்தி:தினதந்தி 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.