Comments

டாஸ்மாக்கில் விரைவில் வருகிறது மினி குவார்ட்டர் இப்ப நாட்டுக்கு தேவையான திட்டம் !!



தமிழகத்தில் தற்போது மாநிலம் முழுவதும் 6800 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. கடந்த ஆறு மாதங்களில் டாஸ்மாக்கில் மது விற்பனை 15% வரை சரிந்துள்ளது. எனவே கர்நாடகா, புதுச்சேரி யில் உள்ளதுபோல் 90 மி.லி., அளவில்”மினி” குவார்ட்டர் பாட்டில்களை அறிமுகப்படுத்தவும் டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் டாஸ்மாக் மது விற்பனை படுமந்தமாக இருப்பது தெரியவந்துள்ளது. எல்லையோர மக்கள் கர்நாடகா சரக்கை அதிகளவில் விரும்புவதும் தெரியவந்தது. கர்நாடகாவில், 50 மி.லி., 100 மி.லி., அளவுகளிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவை தனி பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு, ”குடிமகன்”களிடையே அதிக வரவேற்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தமிழக எல்லையோர கர்நாடகா மாநில டாஸ்மாக் கடைகளில் குவியும் கூட்டத்தையும், மதுபானங்களின் விவரங்களையும் வீடியோ எடுத்து அனுப்பும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து டாஸ்மாக் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”தமிழகத்தைத் தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் மதுபானங்களின் விலை குறைவு. புதுச்சேரியில் 90 மி.லி. அளவில் ”மினி” குவார்ட்ட ரும் கிடைக்கிறது. தமிழகத்தில் மது விற்பனையை அதிகரிக்க இங்கும் ”மினி”குவார்ட்டர் மதுபானங் களை சந்தைப்படுத்த டாஸ் மாக் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது” என்றார்.

About QUILLERZ TRENDZZ

1 comments:

  1. குடிகாரர்களை உற்சாகப் படுத்தும் இதுப்போல செய்திகளை தவிர்க்கவும் .

    ReplyDelete

Powered by Blogger.