Comments

ஊர்செய்தி

தண்ணீர் கேட்டு வி.களத்தூர் ஊராச்சி அலுவலகம் முற்றுகை.

தண்ணீர் கேட்டு வி.களத்தூர்  அலுவலகம் ஊராட்சி முற்றுகை.


வி.களத்தூர்   ஊராட்சி அலுவலகத்தை முற்றுகைட்டு காலி குடங்களுடன் வன்ணராம்பூண்டி பொது மக்கள் சாலை மரியலில் ஈடுபட்டனர்.

சாலை மரியலில் ஈடுபடுவதாக கிராம நிவாக அதிகாரிக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க௦பட்டது கிராம நிர்வாக அதிகாரி தண்ணீர் சீராக தருவதாக உறுதி அளித்த பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர்

தமிழகத்தில் கோடைவெயில் கொளுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலை தூக்கியுள்ளது. கல்லாறு ஓடும் வி.காளத்துரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

நிலைமையைச் சமாளிக்க, பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஊராட்சி நிர்வாகம்.

பருவமழை பொய்த்ததால் கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு, கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது வி.களத்தூர். குடிநீர் பிரச்னையைச் சமாளிக்க வெளி ஊர்களில்  இருந்து சின்னார், தொழுதூர், மங்களமேடு ஆகிய இடங்களிலிருந்து கிணறு, போர்வெல் மூலம் நீரெடுத்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது ஊராட்சி நிர்வாகம்.

நகர்ப்புறங்களுக்கு லாரிகள் மூலம் நீர் எடுத்துச் செல்லப்படும் அதே நேரத்தில், தாங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்கின்றனர் புறநகர்வாசிகள். இதனால், தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் புறநகர் வாழ் மக்கள்.

நகர்ப் பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்து பகுதிகளிலும் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ஊராட்சி நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.









About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.